spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிருப்பூர்: பிறந்து சில மணி நேரமான ஆண் குழந்தை உயிருடன் குப்பையில் வீசப்பட்ட சம்பவம்

திருப்பூர்: பிறந்து சில மணி நேரமான ஆண் குழந்தை உயிருடன் குப்பையில் வீசப்பட்ட சம்பவம்

-

- Advertisement -

திருப்பூரில் பிறந்து சில மணி நேரம் ஆன குழந்தை குப்பையில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர்: பிறந்து சில மணி நேரமான ஆண் குழந்தை உயிருடன் குப்பையில் வீசப்பட்ட சம்பவம்

we-r-hiring

திருப்பூர் சிறுபூலுவபட்டி தாய் மூகாம்பிகை நகர் குப்பை மேட்டில் நேற்று இரவு  குழந்தையின் அழுகுரல் கேட்டிருக்கிறாது. குழந்தை அழுகுரல் கேட்ட அப்பகுதி பொதுமக்கள் அருகில் சென்று பார்த்த போது, துணியுடன் சுற்றப்பட்ட பையில் ஆண் குழந்தை ஒன்று துடிப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் 15 வேலம்பாளையம் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உடனே வந்த 15 வேலம்பாளையம் போலீஸார் குப்பை மேட்டில் வீசப்பட்டிருந்த ஆண் குழந்தையை போலீஸ் ஜீப்பில் எடுத்துச் சென்று திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்னர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, பச்சிளம் குழந்தையை குப்பையில் வீசி சென்றவர்கள் யார் என்பதை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

MUST READ