Homeசெய்திகள்தமிழ்நாடுஎரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு: ஹோட்டல் உரிமையாளர்களுடன் தமிழக அரசு அவசர ஆலோசனை!

எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு: ஹோட்டல் உரிமையாளர்களுடன் தமிழக அரசு அவசர ஆலோசனை!

-

- Advertisement -

எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு: ஹோட்டல் உரிமையாளர்களுடன் தமிழக அரசு அவசர ஆலோசனை!
வளைகுடா நாடுகளில்  நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, இந்தியாவில் வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் (Commercial LPG) விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள உணவகங்கள் மூடப்படும் நிலையை எட்டியுள்ளன..

சிலிண்டர் தாடுப்பாட்டினை தடுக்க சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், மாநிலத்தின் எரிவாயு இருப்பு நிலை மற்றும் உணவகங்களுக்குத் தடையின்றி சிலிண்டர் வழங்குவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

we-r-hiring

மேலும்,  ​இந்த விவகாரம் தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

  1.  எரிவாயு தட்டுப்பாட்டினால் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் குறு, சிறு தொழிற்சாலைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
  2. உணவகங்கள் மூடப்படுவதைத் தவிர்க்கத் தேவையான அனைத்து மாற்று விநியோக ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.
  3. கேஸ் தட்டுப்பாட்டால் சமையலுக்கு மின்சார அடுப்புகளைப் பயன்படுத்தும் உணவகங்களுக்குத் தேவையான கூடுதல் மின்சாரத்தை வழங்க மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும். “ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

​முன்னதாக, தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கத்தினர் முதலமைச்சரைச் சந்தித்தபோது, “சிலிண்டர் விநியோகம் சீராகவில்லை என்றால், இன்னும் 5 முதல் 6 நாட்களில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான உணவகங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர். மேலும், கள்ளச்சந்தையில் அதிக விலைக்குச் சிலிண்டர்கள் விற்கப்படுவதைத் தடுக்கவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தற்போது தமிழகத்தில் சுமார் 20 நாட்களுக்குத் தேவையான எரிவாயு கையிருப்பு உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுக்கலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வீட்டு உபயோகச் சிலிண்டர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் வணிகச் சிலிண்டர் விநியோகத்தை முறைப்படுத்த எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

இந்நிலையில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலியாக ஆலோசனைக் கூட்டம் நடத்த அனைத்து ஹோட்டல் உரிமையாளர்களுக்கும் தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. உணவுத்துறை அமைச்சர் தலைமையில் நாளை ஆலோசனை நடைபெறவுள்ளது. சிலிண்டருக்கு மாற்றாக வேறு வழியை கையாள்வது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ