
போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், அமைச்சர் தலைமையில் இன்று (ஜன.08) மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இந்த வயதிலும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் ரஜினி…. வரிசைகட்டி நிற்கும் அடுத்தடுத்த படங்கள்!
ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு, ஓய்வூதியம் உயர்வு உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் நாளை (ஜன.09) முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு வருமாறு போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்திருந்தது. இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
அதைத் தொடர்ந்து, நேற்று (ஜன.07) மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவிருந்த நிலையில், இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று (ஜன.08) அமைச்சர் சிவசங்கர் தலைமையில் போக்குவரத்துத் தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில், சுமூகத் தீர்வுக் காண அரசுத் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாபெரும் வெற்றி பெற்ற அந்த இந்தி படத்தில் நடிக்கவிருந்த சூர்யா….. இயக்குனர் பகிர்ந்த தகவல்!
போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு அரசு உறுதி அளிக்காத பட்சத்தில், போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் நாளை (ஜன.09) திட்டமிட்டப்படி, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.