spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகூவத்தூரில் நடந்தது இதுதான்..! இபிஎஸ் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது - டிடிவி தினகரன்...

கூவத்தூரில் நடந்தது இதுதான்..! இபிஎஸ் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது – டிடிவி தினகரன் காட்டம்..!!

-

- Advertisement -
டிடிவி தினகரன்
எடப்பாடி பழனிசாமியை காப்பாற்றியது பாஜக அல்ல; அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தான் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சில கட்சியை கவலைக்கிடமாக்கி ஆட்சியை கவிழ்க்க பார்த்தார்கள் என்றும், அதை மத்தியில் (ஒன்றிய அரசு) இருப்பவர்கள் தான், நன்றி மறப்பது நன்றன்று; ஆகையால் தான் நாங்கள் நன்றியோடு இருக்கின்றோம் என்று தெரிவித்தார். அத்துடன் சில அதிமுக ஆட்சியை கவிழ்க்க ஓட்டு போட்டார்கள், ஆனாலும் கூட அவர்களை மன்னித்து துணை முதலமைச்சர் பதவி கொடுத்தோம்; மீண்டும் அவர்கள் திருந்தியபாடில்லை என்று கூறிய இபிஎஸ், அதிமுகவின் கோவிலான கட்சி அலுவலகத்தை அடித்து உடைத்தார்கள். அப்படிப்பட்டவர்களை கட்சியில் சேர்க்க வேண்டுமா? என கேள்வி எழுப்பினர்.

மேலும், தொடர்ந்து பேசிய அவர் இன்னொருவர் அதிமுக ஆட்சியை கவிழ்ப்பதற்காக 18 எம்.எல்.ஏக்களை கடத்திக் கொண்டு போனவர்களையும் கட்சியில் சேர்க்க வேண்டுமா? என்றும், அதிமுகவுக்கு துரோகம் செய்பவர்கள் நடுரோட்டில் தான் நிற்பார்கள் என்றும் ஆவேசமாக விமர்சித்திருந்தார்.

we-r-hiring

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு, தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, “2017ல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சிடை காப்பாற்றியது 122 எம்.எல்.ஏக்களே தவிர பாஜக அல்ல; கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் தங்கவைக்கப்பட்டு வாக்களித்ததால் தான் பழனிசாமி முதலமைச்சராகவே ஆனார். தற்போது அப்பட்டமாக பொய் பேசி வருகிறார். அதிமுக அரசை பாஜக காப்பற்றி உள்ளது என பேசுவது தவறு. பழனிசாமியை காப்பாற்றியது பாஜக இல்லை; அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தான்.

சசிகலாவின் பேச்சை கேட்டுத்தான் 122 எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். இப்போது இபிஎஸ் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது. துரோகத்தை தவிர இபிஎஸ்க்கு வேறு எதுவும் தெரியாது. தமிழக மக்கள் முட்டாள் அல்ல. தோல்வி பயத்தில் பழனிசாமி உளறுவது தெரிகிறது. நிச்சயம் தேர்தலில் தோற்கடிப்பப்படுவார்.

பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பு பேசியவர் பழனிசாமி. அவர் நம்பகத்தன்மையற்ற மனிதர் என அனைவருக்குமே தெரியும். திமுக, தேசிய ஜனநாயக கூட்டணி, விஜய் கூட்டணி, நாம் தமிழர் கூட்டணி என 4 கூட்டணிகள் இம்முறை தேர்தலில் களமிறங்கும். அதிமுக தோற்றால் எடப்பாடி பழனிசாமி தான் காரணம். இந்த முறை எடப்பாடி பழனிசாமி தோற்க நாங்கள் காரணமில்லை” என்று கூறினார்.

MUST READ