spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை தான் முழு மனதுடன் ஏற்கிறேன்...

நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை தான் முழு மனதுடன் ஏற்கிறேன் – விஜய் பேச்சு!

-

- Advertisement -

நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை தான் முழு மனதுடன் ஏற்கிறேன் என இரண்டாம் கட்ட கல்வி விருது விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார்.

we-r-hiring

தமிழக வெற்றிக் கழகம் கழகம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழாவானது கடந்த வாரன் ஜீன் 28-ம் தேதி 20 மாவட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மீதமுள்ள 19 மாவட்ட மாணவர்களுக்கு தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா இன்று நடைபெறுகிறது. இதற்காக சென்னை திருவான்மியூரில் நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு அதிகாலையே விஜய் வருகை புரிந்துள்ளார்.

பின்னர் கல்வி விருது வழங்கும் விழா அரங்குக்கு வந்த தவெக தலைவர் விஜய் 12ம் வகுப்பில் சாதித்த திருநங்கை மாணவி நிவேதா அருகில் அமர்ந்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன் அவரை வாழ்த்தினார். பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை தான் முழு மனதுடன் ஏற்கிறேன். நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். கிராமப்புற பட்டியலினத்தை சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்படுகின்றனர். நீட் தேர்வு மாணவ உரிமைகளுக்கு எதிரானது என்றார்.

 

 

 

 

 

MUST READ