Homeசெய்திகள்தமிழ்நாடுபல்கலை. மானிய குழு விதிமுறைகளுக்கு எதிராக – பச்சசையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

பல்கலை. மானிய குழு விதிமுறைகளுக்கு எதிராக – பச்சசையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

-

- Advertisement -

பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள் கல்லூரி விவகாரத்தில் தலையிடுவதாகவும், அறக்கட்டளையின் கீழ் உள்ள 6 கல்லூரிகளையும் தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வலியுறுத்தியும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்பல்கலை. மானிய குழு விதிமுறைகளுக்கு எதிராக – பச்சசையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

பச்சையப்பன் அறக்கட்டளையின் நிர்வாகியும், செயலாளரும் கல்லூரி நிர்வாக விவகாரங்களில் தலையிடுவதை கண்டித்தும், பல்கலை. மானிய குழு மற்றும் உயர்க் கல்வி விதிமுறைகளுக்கு முரணாக செயல்படுவதாகவும், அறக்கட்டளையின் நிர்வாகி பார்த்திபனும், செயலாளர் துரைக்கண்ணுவும் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கலை மற்றும் அறிவியல் பிளாக் கதவை மூடி வைத்துள்ளதாகவும், இளநிலை படிப்புகளுக்கு மூடு விழா நடத்தியதாகவும் கல்லூரியின் பிரதான வாயில் எப்போதும் மூடியே இருப்பதாகவும் குறிப்பிட்டு கல்லூரி முதலவரை கண்டித்தும், கல்லூரிக் கல்வி மேம்பாட்டுக் குழுவை அமைக்க வலியுறுத்தியும் உள்ளிருப்பு போராட்டத்தின்போது கோஷம் எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சாம் கேப்ரியல் கூறும்போது, பச்சையப்பன் அறக்கட்டளையின் செயலாளர் துரைக்கண்ணு கல்லூரி விஷயங்களில் தலையிடுகிறார். இது பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கும், உயர்கல்வி சட்டத்திற்கு முரணானது. அறக்கட்டளை நிர்வாகி தலையிடுவதால் கல்லூரி செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படுகின்றது.  தமிழக அரசு இந்த விவகத்தில் தலையிட்டு பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் 6 கல்லூரிகளையும் அரசே ஏற்று நடத்த வேண்டும்.

தொடர்ந்து பிரதான வாயில் அடைக்கப்படுகிறது, கழிவறைக்கு செல்வதற்கு கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. கல்லூரியின் முதல்வர் அறக்கட்டளை செயலாளருடைய ஊதுகுழலாக செயல்படுகிறார். இன்று மாணவர்கள் வெற்றிகரமாக போராட்டம் நடத்தினோம், ஆனால் நிர்வாகம் அழைத்துப் பேசவில்லை இன்றைய போராட்டத்தை முடித்துக் கொண்டோம், தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம், என்றார்கள்.

பெரியார் சர்ச்சை : அத்தனைக்கும் விஜய்தான் காரணம்… உண்மையை போட்டுடைத்த சீமான்!

MUST READ