spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆவின் பால் பொருட்களின் விற்பனை விலையினை உடனே குறைத்திடவேண்டும் - V K சசிகலா வலியுறுத்தல்

ஆவின் பால் பொருட்களின் விற்பனை விலையினை உடனே குறைத்திடவேண்டும் – V K சசிகலா வலியுறுத்தல்

-

- Advertisement -

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி இதுநாள் வரை 5%, 12%, 18% மற்றும் 28% ஆகிய 4 அடுக்குகளின் கீழ் வரிகள் இருந்த நிலையில் தற்போது  இதனை 4 அடுக்கிலிருந்து 2அடுக்குகளாக அதாவது 5% மற்றும் 18% என திருத்தம் செய்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது என V K சசிகலா கூறியுள்ளாா்.ஆவின் பால் பொருட்களின் விற்பனை விலையினை உடனே குறைத்திடவேண்டும் - V K சசிகலா வலியுறுத்தல்மேலும், இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் மூலம் நாட்டு மக்களின் மீதுள்ள சுமை குறைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நாட்டு மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தால் சமையலறைப் பொருட்கள், மின்னணு பொருட்கள், மருந்துகள், விவசாயத்திற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் ஆட்டோமொபைல்கள் வரை பல பொருட்களின் விலையானது குறைந்துள்ளது. குறிப்பாக, நெய், பன்னீர், வெண்ணெய், பிரெட் உள்ளிட்ட பல உணவுப் பொருட்களின் விலையும், டிவி, ஏசி, வாஷிங் மெஷின்கள் போன்ற பல வீட்டு அத்தியாவசிய பொருட்களின் விலையும் குறைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அதேபோன்று தினசரி பயன்பாட்டுப் பொருட்களான ஹேர் ஆயில், டாய்லெட் சோப், ஷாம்பு, டூத் பேஸ்ட் போன்றவற்றின் மீதான வரியும் 5 சதவீதமாக குறைக்கப்பட்டு தற்போது அமலுக்கு வந்துவிட்டன.

நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு ஆவின் பால் பொருட்களின் விலையை குறைக்காமல் விற்பனை செய்வது மிகவும் கண்டனத்திற்குரியது. அதிலும் குறிப்பாக மத்திய அரசு செய்துள்ள வரி சீர்திருத்தத்தால் விலை குறைந்துள்ள ஆவின் பால் பொருட்களின் விற்பனை விலையை ஏதோ திமுக அரசு விலையை குறைத்தது போன்று தள்ளுபடி விலையில் ஆவின் பால் பொருட்களின் விற்பனை என அறிவித்து இருப்பது தமிழக மக்களை முற்றிலும் ஏமாற்றுகின்ற  செயல். அதிலும் குறிப்பாக வெண்ணெய், சீஸ், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்களின் விற்பனை விலையை குறைக்காமல் நெய், பன்னீர் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பால் பொருட்களின் விற்பனை விலையை சலுகை விலையில் வழங்குவது போன்று திமுக அரசு அறிவித்திருப்பதை வன்மையாக கண்டிக்கின்றேன்.

we-r-hiring

உண்மையில் திமுக அரசு ஆவின் பால் பொருட்களின் விலையை தள்ளுபடி செய்வதாக இருந்தால் முதலில் குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரிக்கேற்ப விற்பனை விலையை குறைத்துவிட்டு அதன் பிறகு திமுக அரசு தள்ளுபடி விலையை அறிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பை திமுக அரசு ஆவின் பால் பொருட்களின் விலையை தள்ளுபடி செய்தது போன்று அறிவிப்பு வெளியிட்டு இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதன்மூலம் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வதில் கைதேர்ந்தவர்கள்  திமுகவினர் என்ற கூற்று மீண்டும் நிரூபணம் ஆகிவிட்டது.

மேலும், மத்திய அரசு செய்துள்ள ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தில் விவசாயத்திற்கு தேவையான உரப்பொருட்களுக்கு 5% அளவுக்கு வரி குறைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாக இருப்பினும், ஏழை, எளிய விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உரப்பொருள்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து முற்றிலுமாக வரிவிலக்கு செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். எனவே, ஜிஎஸ்டி வரிக்குறைப்பிற்கேற்ப அனைத்து ஆவின் பால் பொருட்களின் விற்பனை விலையினை உடனே குறைத்திடவேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு செய்யாமல் காலதாமதம் செய்யும் பட்சத்தில் ஆவின் நிர்வாகத்தின் மீது மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலனை பொதுமக்கள் முழுமையாக அடையும் வகையில் ஜிஎஸ்டி வரி விகிதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு ஏற்ப விற்பனையாளர்கள் விற்பனை விலையில் மாற்றம் செய்து சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்கிறார்களா? என்பதை தொடர்ந்து கண்காணித்திடதேவையான நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என கூறியுள்ளாா்.

மழை வெள்ள பாதிப்பைத் தவிர்க்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

MUST READ