எனக்கும் அண்ணாமலைக்கும் பிரச்சனையா?- வானதி சீனிவாசன்
எனக்கும் அண்ணாமலைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், எனக்கும் அண்ணாமலைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. அக்காவும், தம்பியுமாக தான் உள்ளோம், அக்காவும் தம்பியாக சேர்ந்துதான் கட்சியை வளர்க்கிறோம். ஆட்சி கலைக்கப்படுமோ என்ற பயம் எதனால் வந்தது. கல்யாண வீடுகளை எதிர்க்கட்சிகளை திட்டும் இடங்களாகவே வைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். பிரதமர் மோடியை விமர்சித்ததோடு, ஆட்சி கலைந்தாலும் பரவாயில்லை என்று பேசியிருக்கிறார்.


சட்டம், ஒழுங்கு, லஞ்சம் ஊழல் பிரச்சனை குறித்து முதல்வர் சிந்துக்க வேண்டும். குடியரசு தலைவருக்கு முதல்வர் கடிதம் எழுதியிருப்பது முழுவதும் கற்பனை மற்றும் உண்மையில்லாத விஷயங்கள். ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஆளுநர் உரிய பதிலடி கொடுப்பதால் முதலமைச்சருக்கு கோபம் வருகிறது. எதற்காக அவருக்கு இப்போது ஆட்சி கலையும் என்கிற பயம் வந்துள்ளது என தெரியவில்லை. ஆட்சியை கலைக்க தேவையான பிரச்சனைகள் இந்த ஆட்சியில் இருப்பதாக அவர் நினைக்கிறாரா?” எனக் கேள்வி எழுப்பினார்.


