வேங்கைவயல் விவகாரம்- அதிர்ச்சி தகவல்
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதனிடையே வேங்கைவயல் வழக்கில் இறுதி விசாரணை அறிக்கையை பதிவு செய்ய அவகாசம் கேட்டு சிபிசிஐடி மனுதாக்கல் செய்துள்ளது. அதில் சாட்சியங்களிடம் கூடுதல் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் 30 நாட்கள் அவகாசம் வழங்கவேண்டும் எனக்கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் குரல் மாதிரி சோதனைக்காக சென்னை தடயவியல் துறை அலுவலகத்தில் 2 பேர் ஆஜராகியுள்ளனர். வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக வாட்ஸ்அப் குழுவில் தகவல் பரிமாற்றம் செய்த இரண்டு இளைஞர்கள் ஆஜராகியுள்ளனர். மேலும் குடிநீர் தொட்டியில் கலந்த மனித கழிவு ஒரு பெண், 2 ஆண்களுடையது என மனித கழிவு கலக்கப்பட்ட நீரை பகுப்பாய்வு செய்ததில் தெரியவந்துள்ளது. வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக 11 பேரிடம் டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது குறிப்பிடதக்கது.