தமிழக அரசியலில் பெண்களின் பங்களிப்பை பறைசாற்றும் வகையில், திமுக மகளிர் அணி சார்பில் டெல்டா மண்டல மாநாடு வரும் ஜனவரி 19, 2026 (திங்கட்கிழமை) அன்று மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் அமையவுள்ள பிரம்மாண்ட திடலில் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்ற எழுச்சியான தலைப்பில் இந்த மாநாடு அரங்கேறுகிறது.
திமுக துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டிற்கு, திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு முன்னிலை வகிக்கிறார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த மாநாட்டில் சிறப்புரையாற்றி, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முக்கிய வழிகாட்டுதல்களை மகளிர் அணித் தொண்டர்களுக்கு வழங்க உள்ளார்.

இந்த மாநாடு தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கட்சியின் மகளிர் அணியினரை உற்சாகப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழக அரசின் மகளிர் நலத் திட்டங்களான ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ மற்றும் ‘இலவசப் பேருந்து பயணம்’ போன்றவற்றின் தாக்கத்தை மக்களிடையே கொண்டு செல்வதில் இந்த மாநாடு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வைகோவின் நெஞ்சுரத்தைப் பார்க்கும் போது அவருக்கு 28 வயது போல எண்ணத் தோன்றுகிறது – முதல்வர் புகழாரம்


