spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிமுக என்னும் ஆலமரத்தை அறுப்பதற்கு வந்த 21-வது பிளேடு தான் விஜய் -...

திமுக என்னும் ஆலமரத்தை அறுப்பதற்கு வந்த 21-வது பிளேடு தான் விஜய் – திண்டுக்கல் லியோனி!!

-

- Advertisement -
kadalkanni
திண்டுக்கல் லியோனி
திராவிட முன்னேற்ற கழகம் என்னும் ஆலமரத்தை அறுப்பதற்கு வந்த 21-வது பிளேடு தான் விஜய் என திண்டுக்கல் லியோனி விமர்சித்துள்ளார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தண்டையார்பேட்டையில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது
ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவர் லியோனி பங்கேற்று உரையாற்றினார். மேலும் நிகழ்ச்சியில் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகரும் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பேசிய திண்டுக்கல் லியோனி, “நேருக்கு நேர் தமிழக முதலமைச்சர் என்னுடன் பேசத் தயாராக என எடப்பாடி பழனிசாமி சவால் விட்டு உள்ளார். அதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நான் வேணாலும் வருகிறேன் என்று கூறினார். ஆனால் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் முதலமைச்சர் போக வேண்டாம்; துணை முதலமைச்சர் போக வேண்டாம்; நான் இருக்கேன் . எடப்பாடி பழனிச்சாமியின் அவரது ஊரான எடப்பாடியில் மேடை போட்டு பேசுவோமா?

ஆர்.கே. நகரில் எடப்பாடிக்கு சவால் விடுகிறேன். எடப்பாடி ஊரில் மேடை போட்டு திமுகவுடைய சாதனை, அதிமுக சாதனை என்ன என்று பேச தயாரா? மக்கள் யாருக்கு கைதட்டி அதிகமாக ஓட்டு போடுகிறார் என்பதை இப்போது தீர்மானிக்கலாமா? . உலகமே பாராட்டக்கூடிய அளவிற்கு இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

தவெக மாநாட்டில் ஓடி வந்த விஜய்க்கு கூட்டத்தினர் கட்சித் துண்டை வீசினர். இவரும் அதை கூட்டத்தில் வீசினார். ஆனால் அதைக்கூட கவனிக்காமல் பின்னால் வந்தவர்கள் அதை மிதித்து கொண்டு வந்தார்கள். முதல் மாநாட்டில் கட்சி துண்டு பலரால் மிதிபட்டது கூட கவனிக்காமல் நடக்கிறது. இது எல்லாம் மாநாடா? சென்னை கோட்டை வரைந்து அந்த கோட்டைகள் ஓடுகிறார். அந்த டுபாக்கூர் பொம்மை கோட்டைக்குள் ஓடுவதற்கே 800 மீட்டர் ஓட வேண்டி இருந்தது. சார்ஜ் கோட்டை பிடிப்பதற்கு எத்தனை மீட்டர் தூரம் ஓட வேண்டும் ப்ரோ?

எவன் நீண்ட தூரம் ஓடி வருகின்றானோ அவனால் தான் உயரத்தை தாண்ட முடியும். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை ஒடுக்குவதற்காகவும், அவர்களை நசுக்குவதற்காகவும் பாடுபட்டவர் டாக்டர் அம்பேத்கார் என்கிறார் அவர். ஒடுக்கப்பட்டமக்களை மேலும் ஒடுக்க பாடுபட்டவர் அம்பேத்காரா? இதிலிருந்து மனப்பாடம் செய்து ஒப்பிக்கிறார் என்று தெரிகிறது.

திராவிட முன்னேற்ற கழகம் என்கின்ற ஆலமரத்தை அறுப்பதற்கு வந்த 21-வது பிளேடு தான் நீங்கள்(விஜய்). ஏற்கனவே 20 பிளேடுகள் வந்து அதில் நான்கு துருப்பிடித்து கிடக்கின்றன; சில பிளேடுகள் மரத்தோடு ஒட்டி கிடக்கிறது; சில பிளேடுகள் எதற்கு வந்தோம் என்று தெரியாமல் அனாதையாக கிடக்கிறது. 21வது பிளேடு தான் தம்பி விஜய். திமுக என்ற ஆலமரத்தை எந்த கொம்பனாலும் அசைத்துப் பார்க்க முடியாது. எங்கள் திராவிடம் மாடல் முதலமைச்சர் திட்டங்கள் ஒவ்வொன்றும் மக்களுக்கானது. உரிமைத்தொகை வாங்கிக் கொண்டிருக்கும் 15 லட்சம் பெண்கள் முதலமைச்சர் பக்கம் இருந்து கொண்டே இருப்பார்கள்.

5 தொகுதியில் டெபாசிட் போன பிறகு எடப்பாடி பழனிச்சாமி என்ற பொய் பேசும் புளுகு மூட்டை எடப்பாடிக்கு சவால் விடுகிறேன். எடப்பாடியும் வேண்டாம் திண்டுக்கல்லும் வேண்டாம். ஆர்.கே.நகரில் மேடை போட தயாரா? என்னுடன் பேச தயாரா? என்று கேள்வி எழுப்பினார். திராவிட முன்னேற்றக் கழகத்தை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. வருகின்ற 2026ல் 234 தொகுதிகளில் 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்” என்று தெரிவித்தார்.

MUST READ