Homeசெய்திகள்தமிழ்நாடுவிஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது!

விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது!

-

 

விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது!

காலஞ்சென்ற விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் சென்னை தீவுத்திடலில் இருந்து தொடங்கியது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் விஜயகாந்த் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டுள்ள வாகனத்தில் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன்கள் உள்ளிட்டோர் உள்ளனர். ஈவெரா சாலை வழியாகச் செல்லும் இறுதி ஊர்வலம் கோயம்பேடு தே.மு.தி.க. அலுவலகத்தைச் சென்றடையும்.

விஜயகாந்த் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி!

விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர். இறுதி ஊர்வலம் செல்லும் சாலையின் இருபுறம் ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருந்து விஜயகாந்திற்கு தங்களின் இறுதி அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.

விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் குடும்பத்தினர் கட்சி தொண்டர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

விஜயகாந்த் உடலுக்கு மத்திய நிதியமைச்சர் அஞ்சலி!

அடக்கம் செய்யப்படும் சந்தனப்பேழையில் ‘புரட்சிக்கலைஞர் கேப்டன்’ விஜயகாந்த் என்ற வாசகம் உள்ளது. நிறுவனத் தலைவர் தே.மு.தி.க. எனவும், விஜயகாந்தின் பிறப்பு, இறப்பு தேதிகளும் பெட்டியில் இடம் பெற்றுள்ளன.

MUST READ