spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) – தேர்தலை இலக்கு வைத்து உள்நோக்கத்துடன் SIR பணிகளை...

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) – தேர்தலை இலக்கு வைத்து உள்நோக்கத்துடன் SIR பணிகளை மேற்கொள்வதாக திருமாவளவன் குற்றச்சாட்டு

-

- Advertisement -

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை கண்டித்து வருகின்ற 24 ஆம் தேதி விசிக சார்பாக சென்னையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது.வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) – தேர்தலை இலக்கு வைத்து உள்நோக்கத்துடன் SIR பணிகளை மேற்கொள்வதாக திருமாவளவன் குற்றச்சாட்டு

சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான  தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்திதார். உடன் விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

we-r-hiring

முன்னதாக துபாய் அபுதாபியில் நடைபெற உள்ள குத்து சண்டை போட்டியில் பங்குபெற உள்ள இரண்டு வீராங்கனைகளுக்கு தலா 75 ஆயிரம் ரூபாய்யை வழங்கினார்.

பின்னர் பேசிய அவர், பீகாரின் தேர்தல் முடிவு யாரும் எதிர்பாக்காத ஒன்று, இது குறித்து எதிரும், புதிருமான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் நேர்மையாக நடைபெற வில்லை என மக்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்துள்ளது என தெரிவித்தார்.

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை கேள்வி குறியாகி உள்ளது. பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் என இரண்டு நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து கொண்டு வந்த சதியாக எஸ்.ஐ.ஆர் திட்டத்தை கொண்டு வந்து உள்ளனர்.

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகளை கைவிட வேண்டும் என விசிக தொடரந்து வலியுறுத்தி வருகிறது. அதற்கு காரணம் மிக குறுகிய காலம் மட்டுமே உள்ளது. குறுகிய காலத்தில் வாக்காளர்கள் தங்கள் பெயர்களை சேர்ப்பது சவாலாக உள்ளது.  கேரளாவில் இந்த பணிகளை மேற்கொண்ட அதிகாரி தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்திலும் அதற்கு எதிர்ப்பு உள்ளது.

குறுகிய காலத்தில் பணிகளை மேற்கொள்ள முடியாது என வருவாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை கண்டித்து வருகின்ற 24 ஆம் தேதி விசிக சார்பாக சென்னையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது.

பொதுவாக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக எப்போதும் மேற்கொள்ளும் முறைகளில் ஏன் இப்போது வாக்காளர் திருத்த பணிகளை  மேற்கொள்ள வில்லை என கேள்வி எழுப்பினார்.

2005 ஆம் ஆண்டு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மேற்கொண்டதாக ஆதாரம் இல்லை எனவும் தமிழகத்தில் இந்த பணிகளை மேற்கொள்ள மிக குறுகிய காலம் தான் உள்ளது எனவும்  நடைமுறையில் அதற்கான சாத்தியம் இல்லை எனவும் தெரிந்தும் உள்நோக்கத்தோடு இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என தெரிவித்தார்.

எதிர்ப்பு வாக்குகளை வாக்களிக்க விடாமல் தடுக்கும் வகையில் உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. அதே போல அவர்களுக்கு எதிரான வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கையாக தான் இந்த பணிகள் உள்ளது எனவும் குற்றம்சாட்டியுள்ளாா்.

பாஜக தேர்தல் ஆணையம் கூட்டாக இந்த சதியை செய்து வருகிறர்கள். குடியிரிமை சட்டத்தை மறைமுகமாக கொண்டு வர இதனை மேற்கொண்டு வருகிறார்கள். எஸ்.ஐ.ஆர் வேண்டாம் என தான் விசிக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நடைமுறை சிக்கல்களை கூறி வருவாய் துறை அதிகாரிகள் அதனை புறகணித்து உள்ளனர். அதற்கு மதிப்பு அளிக்க வேண்டும்.

மக்களுக்கு எதிரான விரோத போக்கை அதிகாரிகள் வேடிக்கை பார்க்க முடியாது. கேரளாவில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர் ஒருவர் மன அழுத்ததில் உயிரிழந்ததிற்கு தேர்தல் ஆணையம் பொறுப்பு ஏற்க வேண்டும் என கூறினார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு எஸ்.ஐ.ஆர் பணிகளை மேற்கொள்ளலாமே எனவும் தேர்தலுக்கு முன்னதாக எப்போது இருக்கும் நடைமுறையையே பின்பற்றலாமே எனவும் கூறினார். கொளத்தூர் தொகுதிகளில் போலி வாக்காளர்கள் இருந்தால் அதனை பாஜக கண்டுபிடிக்கடும்.

எஸ்.ஐ.ஆர் குறித்து தவெக நடத்திய போராட்டம் குறித்தான கேள்விக்கு, தமிழக வெற்றிக் கழகம் இன்னும் அரசியல் கழகத்திற்கு முழுவதும் வரவில்லை எனவும் முறையாக இதனை தவெக அணுக வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தவெக கருத்து முரணாக உள்ளது. தவெக தலைவர் விஜய் எஸ்.ஐ.ஆர் குறித்து பேசி விடியோவில் பாஜக வை பற்றி பேசவில்லை. திமுக வெறுப்பு, திமுக எதிர்ப்பு மட்டுமே விஜய்க்கு தெரியும் என விமர்சனம் செய்துள்ளாா்.

இரண்டு நாட்களுக்கு முன்னதாக இலங்கை யாழ்பாணம் சென்றேன். அங்கு நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டேன். வடமாகண சபையின் முதல்வர் விக்னேஷ் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அதற்கு பிறகு தமிழ் தேசிய மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டேன். இதில் இலங்கையின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தனர். இலங்கையில் புதிய அரசமைப்பு சட்டத்தை உருவாக்க உள்ளார். அதற்கான சட்டங்கள் தயாராகி வருகிறது.

ஈழ தமிழர்களுக்கு இந்த புதிய அரசமைப்பில் அவர்களுக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும் அதற்கு இந்திய அரசு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் அதற்கு தமிழக அரசு மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

இலங்கையில் ஈழ தமிழர்களுக்கு ராஜூவ் காந்தி பிரதமாக இருந்த போது கொண்டு வந்த 13 ஆவது திருத்ததில் எங்களுக்கு விருப்பம் இல்லை ஆனால் அது அவர்களுக்கு கூடுதல் அதிகாரத்தை கொடுக்கும். எனவே அதனை கொண்டு வர மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இந்திய இலங்கை ஒப்பந்ததை ஏற்கிறோம். அதில் 13 ஆவது ஒப்பந்தததை ஏற்க வில்லை என அவர்கள் தெரிவித்து உள்ளனர். பிரதமரும், தமிழக முதல்வரும் இந்த விஷயத்தில் நல்ல முடிவு எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பு கருவியாக புத்தரை பயன்படுத்தி வருகிறார்கள்.

சிங்கள பௌத்தர்களின் இந்த போக்கை விசிக கண்டிகிறது. தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும் என தொடக்கத்திலே கூறினோம். மீண்டும் முதலமைச்சரை சந்தித்து அவர்கள் விஷயத்தில் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என எடுத்து கூற உள்ளேன்.

பீகாரில் செய்தது போல் தமிழகத்தில் செய்ய நினைக்கிறார்கள். தில்லுமுல்லு செய்து ஆட்சியை பிடிக்க நினைக்கிறார்கள். மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என தெரிவித்தார். கிரிமினிலேயர் பெற்றோர்களுக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையில்லை என்ற நிலைபாடு தான் கிரிமிலேயார் பிற்படுத்தப்பட்டவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களையும் சிதறடிக்க பார்க்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.

10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்…

MUST READ