spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவக்ஃபு வாரிய உறுப்பினர்களாக இருவர் தேர்வு!

வக்ஃபு வாரிய உறுப்பினர்களாக இருவர் தேர்வு!

-

- Advertisement -

 

சென்னைக்கு புதிய மாவட்ட ஆட்சியர் நியமனம்!
Photo: TN Govt

தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினர்களாக முகமது பஷீர், நவாஸ் ஆகியோர் தேர்வுச் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

we-r-hiring

ஆசிய விளையாட்டு- ஹாக்கியில் இந்தியாவுக்கு தங்கம்!

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தலில், முத்தவல்லிப் பிரிவு உறுப்பினர் பிரிவில் இரண்டு காலியிடத்திற்கான தேர்தல் கால அட்டவணை கடந்த ஆகஸ்ட் மாதம் 24- ஆம் தேதி அன்று அறிவிக்கையாக வெளியிடப்பட்டதில், ஆறு உறுப்பினர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து போட்டியிட்டனர்.

மேற்படி பிரிவிற்கான தேர்தல் அக்டோபர் 03- ஆம் தேதி அன்று இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்பட்டு, வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 04- ஆம் தேதி அன்று நிறைவடைந்தது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சுப்மன் கில் பங்கேற்பதில் சிக்கல்!

தேர்தலில், தமிழ்நாடு வக்ஃபு வாரிய (உறுப்பினர்களுக்கு தேர்தல் நடத்துதல்) விதிகள், 1997, விதி 20- ன் படி, முஹம்மது பஷீர் மற்றும் நவாஸ் ஆகியோர் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் உறுப்பினர்களாக முறையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதாக தேர்தல் அலுவலரால் அறிவிக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ