தேசிய கல்விக் கொள்கை நடைமுறைமாக்கலும் தமிழக நலன் சார்ந்த கல்வியார்களின் பார்வையும்’ என்ற கருதரங்கத்தை அகில இந்திய கல்விபாதுகாப்பு கமிட்டியும் அறம் இணைய இதழும் இணைந்து நடத்தினர்.
தியாகராயர் நகரில் உள்ள தக்கர் பாப்பா வித்யாலயாவில் நடைபெற்ற நிகழ்வில் மாநில கமிட்டி உறுப்பினர் மருதநாயகம் தலைமையில், பேராசிரியர் கருணானந்தன் வரலாற்று துறை தலைவர் விவேகானந்தா கல்லூரி, முனைவர் மாயவன் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம். பேராசிரியர் ஜவஹர் நேசன் அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி தலைமை குழு உறுப்பினர், பேராசை யோகராஜன் மாநிலச் செயலாளர் தமிழக சிறப்பாசிரியர் சங்கம், மாநில பொதுச்செயலாளர் முனைவர் சின்ன கிருஷ்ணா கௌரவ விரிவுரையாளர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர்,உமா மகேஸ்வரி மாநில கமிட்டி உறுப்பினர் உள்ளிட்டோர் பங்கேற்று தங்களுடைய கருத்துக்களையும் தரவுகளையும் எடுத்துரைத்தனர்.
ஏன் தேசியக் கல்விக் கொள்கை 2020 வேண்டாம்? ஒன்றிய அரசு நாடு முழுவதும் கல்வியில் ஜனநாயக பூர்வ மதசார்பற்ற விஞ்ஞான பூர்வ கோட்பாடுகளை நீக்கி கல்வியை தனியார் மயம், வியாபார மயம், மத மயம் ஆக்கி வருகிறது. இதனால் கல்வித்துறையில் நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குறியாகும் வகையில் உருவாக்கி உள்ளது என்றும் தெரிவித்தனர்.சனாதனத்தை புகுத்தும் கல்விக்கொள்கையாகவே இருக்கிறது. ஆகவே தமிழ்நாட்டின் கட்டமைப்பு மாணவர்களின் சுற்றுச்சூழல் போன்றவற்றை கருத்தில் கொண்டு திராவிட மாடல் என்னும் பொழுது மாநிலத்திற்கான தனிப்பட்ட கல்விக் கொள்கை அரசு தயார்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி தலைமை குழு உறுப்பினர், முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜவஹர் நேசன் ஏன் 2020 கல்வி கொள்கை வேண்டாம்? கல்வி பாதிப்பு, சமூக ஏற்ற தாழ்வு ஏற்படுத்தும் கல்வியாகவே இருக்கிறது. தேசிய கல்வி கொள்கை சனாதன கல்வி முறை பஞ்சம கோஷா என்ற முறையில் பல நூறு ஆண்டுகளுக்கு பின் தங்கிய வேத சாஸ்திரத்தை புகுத்துகிறது. 21- ஆம் நூற்றாண்டில் மனித உற்பத்தி மாறி வருகிறது. அறிவியல் பூர்வ விஞ்ஞான பூர்வமாக தொழில் பூங்காக்கள் வளர்ந்து வரும் தருணத்தில் இதைப் பற்றி ஒரு வார்த்தை கூட இடம்பெறாமல் தேசியக் கல்விக் கொள்கை இருக்கிறது. சமூக நீதி சமத்துவமான கல்வி முறை தான் நமக்குத் தேவை இதோடு தனித்துவம் வாய்ந்த தமிழ்நாடு மாநிலத்திற்கான கல்வி கொள்கை வேண்டும். அரசு இதை உடனடியாக செயல்படுத்த முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 7535 காலி பணியிடங்கள்- வெளியானது மிக முக்கிய அறிவிப்பு..!