spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇளம்பெண் ஆணவக் கொலையில் பெற்றோர் கைது!

இளம்பெண் ஆணவக் கொலையில் பெற்றோர் கைது!

-

- Advertisement -

 

இளம்பெண் ஆணவக் கொலையில் பெற்றோர் கைது!

we-r-hiring

தஞ்சாவூரில் கலப்பு திருமணம் செய்த இளம்பெண் கொலை செய்யபப்ட்ட வழக்கில் பெண்ணின் பெற்றோர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் பல்லடம் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு முன்பதிவு தொடக்கம்!

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே பூவாலூர் கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா, அதே பகுதியைச் சேர்ந்த நவீன் ஆகிய இருவரும் திருப்பூரில் பணியாற்றிய போது காதலித்துள்ளனர். இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி இருவரும் காதல் திருமணம் செய்துள்ளனர். பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், மகள் ஐஸ்வர்யாவை பெற்றோர் தங்களுடன் அழைத்துச் சென்றுள்ளனர். இந்த நிலையில், கடந்த ஜனவரி 03- ஆம் தேதி ஐஸ்வர்யா உயிரிழந்த நிலையில், யாருக்கும் தெரியாமல் அவரது உடலை பெற்றோர் எரித்துள்ளனர்.

ஐஸ்வர்யா காணாமல் போனது குறித்து காதல் கணவர் நவீனும், ஊர் பொதுமக்கள் தகவல் அளித்ததன் அடிப்படையில், கிராம நிர்வாக அலுவலரும், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தியதில் கலப்பு திருமணம் செய்த பெண்ணை பெற்றோரே கொலை செய்து எரித்தது தெரிய வந்துள்ளது.

அரசின் புதிய தலைமை வழக்கறிஞர் நியமனம்!

இதனையடுத்து, பெண்ணின் தந்தை பெருமாள், தாய் ரோஜாவை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, பல்லடம் காவல் ஆய்வாளர் முருகையா, ஐஸ்வர்யாவின் விருப்பத்திற்கு மாறாக, அவரை பெற்றோருடன் அனுப்பி வைத்ததாக புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து, முருகையாவை கோவை சரக காவல்துறை டி.ஐ.ஜி. பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

MUST READ