spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதந்தையாக,அண்ணணாக வழிநடத்தும் முதல்வர் என பெண்கள் புகழாரம்....ரூ.5 ஆயிரம் பெற்ற பெண்கள் உற்சாக கொண்டாட்டம்…

தந்தையாக,அண்ணணாக வழிநடத்தும் முதல்வர் என பெண்கள் புகழாரம்….ரூ.5 ஆயிரம் பெற்ற பெண்கள் உற்சாக கொண்டாட்டம்…

-

- Advertisement -

உரிமை தொகை மற்றும் கோடைகால தொகையென ரூ.5000 பெற்ற பெண்கள் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து,நடனமாடி அயப்பாக்கத்தில் பெண்கள் உற்சாகமாக கொண்டாடினர்.தந்தையாக,அண்ணணாக வழிநடத்தும் முதல்வர் என பெண்கள் புகழாரம்....ரூ.5 ஆயிரம் பெற்ற பெண்கள் உற்சாக கொண்டாட்டம்…

தமிழ்நாடு அரசின் பெண்கள் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ரூ.1,000க்கு இணையாக, கோடைகால சிறப்பு உதவித் தொகையாக ரூ.5,000 வழங்கப்பட்டதை தொடர்ந்து, மதுரவாயல் அருகே அயப்பாக்கம் பகுதியில் பெண்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.

we-r-hiring

அயப்பாக்கம் பேருந்து நிலையத்தில் திரண்ட மகளிர் குழுக்கள் மற்றும் திமுகவைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி, பாடல்கள் பாடி, நடனமாடி மகிழ்ச்சி வெளிப்படுத்தினர்.

“முதல்வர் எங்களுக்கு தந்தையாகவும், அண்ணனாகவும் இருந்து எங்கள் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார். வழங்கப்பட்டுள்ள இந்த ரூ.5,000 தொகை எங்கள் குழந்தைகளின் கல்விச்செலவுக்கு பெரிதும் உதவும்,” என்று பெண்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் கொண்டாட்ட சூழலை உருவாக்கியது.

குடும்ப பெண்களை இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்த ஸ்டாலின் தந்த “SURPRISE”

MUST READ