spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபெண்ணுடன் பழக்கம்....கொலையில் முடிந்த நட்பு!

பெண்ணுடன் பழக்கம்….கொலையில் முடிந்த நட்பு!

-

- Advertisement -

 

பெண்ணுடன் பழக்கம்....கொலையில் முடிந்த நட்பு!

we-r-hiring

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டை 10- வது தெருவில் தனியார் இரும்பு தொழிற்சாலையில் மதுரையை சேர்ந்த செல்லப்பாண்டி (வயது 55) என்பவரும், திருச்சி மணப்பாறைப் பகுதியை சேர்ந்த கருப்பையா (வயது 45) என்பவரும் தங்கி இருந்து வேலை பார்த்து வருகின்றனர்.

விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின்… இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரம்…

இந்நிலையில் கருப்பையாவுடன் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கருப்பையாவும், அந்த பெண்ணும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் தனது செல்போன் பழுதானதால் செல்லபாண்டி என்பவரிடம் செல்போன் வாங்கி அந்த பெண்ணிடம் பேசி வந்துள்ளார்.

இதனிடையே செல்லப்பாண்டியும், கருப்பையா தொடர்பு வைத்துள்ள பெண்ணுடன் செல்போனில் பேசி வந்துள்ளார். இது குறித்த அறிந்த கருப்பையா நேற்று முன்தினம் (ஏப்ரல் 15) இரவு செல்லபாண்டியிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில் கருப்பையா அங்கிருந்த கட்டையை எடுத்து செல்லப்பாண்டியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த செல்லப்பாண்டியை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

செந்தில் பாலாஜியின் காவல் 33-வது முறையாக நீட்டிப்பு!

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த அம்பத்தூர் தொழில்பேட்டை போலீசார் கருப்பையாவை கொலை முயற்சி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்லப்பாண்டி இன்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கருப்பையா மீது பதியப்பட்ட கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

MUST READ