Homeசெய்திகள்முதல்வரின் உறவினர் கைது! தடயங்களை அளிக்க சதி திட்டம் தீட்டினாரா?

முதல்வரின் உறவினர் கைது! தடயங்களை அளிக்க சதி திட்டம் தீட்டினாரா?

-

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பா ஒய் .எஸ். விவேகானந்த ரெட்டி . இவரை சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த பொது தேர்தலுக்கு முன்பாக கடப்பா மாவட்டத்தில் தங்களின் சொந்த ஊரான புலிவெந்தலாவில் ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பா படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவத்தில் தேர்தல் ஆதாயத்திற்காக தெலுங்கு தேசம் கட்சியினர் ஆள் வைத்து தங்கள் உறவினரை கொலை செய்து விட்டார்கள் என்று ஜெகன்மோகன் ரெட்டி குடும்பத்தினர் குற்றம் சாட்டியிருந்தனர்.

c

இதை அடுத்து இந்த படுகொலை சம்பவத்தில் வழக்கு பதிவு செய்த கடப்பா போலீசார் நடத்திய விசாரணையில் நாடாளுமன்ற உறுப்பினர் விவேகானந்தா ரெட்டியின் மகள் தனது தந்தை கொலை செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் விவேகானந்தரட்டி படுகொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து இந்த வழக்கு குறித்து பதிவு செய்து சிபிஐ கடந்த நான்கு ஆண்டுகளாக விசாரணை நடத்தி சிலரை கைது செய்துள்ளது . அதில் ஒரு பகுதியாக தான் கடப்பா மாவட்டத்தில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டியின் சொந்த ஊரான புலிவெந்தலாவுக்கு இன்று அதிகாலையில் சென்ற சிபிஐ அதிகாரிகள் கடப்பா நாடாளுமன்ற உறுப்பினர் ஒய். எஸ். அவினாசி ரெட்டியின் தந்தை ஒய். எஸ். பாஸ்கர் ரெட்டியை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

பின்னர் அவரை ஹைதராபாத்திற்கு அழைத்துச் சென்றனர். இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவிநாசி ரெட்டியின் நெருங்கிய நண்பர் உதயகுமார் ரெட்டி இந்த வழக்கில் கைதானது குறிப்பிடத்தக்கது.

கொலை நடந்த அன்று உதயகுமார் ரெட்டி, சிவக்குமார் ரெட்டி, அவினாசி ரெட்டி , அவரின் தந்தை பாஸ்கர் ரெட்டி ஆகியோர் தடயங்களை அளிக்க சதி திட்டம் தீட்டினார்கள் என்று சிபிஐ தெரிவித்திருக்கிறது.

MUST READ