Homeசெய்திகள்விக்டோரியா பள்ளியில் வாயு கசிந்த விவகாரம் - 35 மாணவிகள் அரசு மருந்துவமனையில் அனுமதி!

விக்டோரியா பள்ளியில் வாயு கசிந்த விவகாரம் – 35 மாணவிகள் அரசு மருந்துவமனையில் அனுமதி!

-

- Advertisement -

விக்டோரியா பள்ளியில் வாயு கசிந்த விவகாரம் - 35 மாணவிகள் அரசு மருந்துவமனையில் அனுமதி

சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதை அடுத்து மாணவிகள் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். வாயு கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து பள்ளியின் 3வது தளத்தில் இருந்த மாணவிகள் சிலருக்கு மயக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மயக்கமடைந்த 3 மாணவிகள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த பெற்றோர்கள், தங்களின் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

விக்டோரியா பள்ளியில் வாயு கசிந்த விவகாரம் - 35 மாணவிகள் அரசு மருந்துவமனையில் அனுமதி

சென்னை திருவொற்றியூரில் உள்ள விக்டோரியா பள்ளியில் கெமிக்கல் வாயு வெளியேறியதை அடுத்து பள்ளியின் முன்பு குவிந்திருந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்ற நிலையில் கெமிக்கல் வெளியேறியதில் பாதிக்கப்பட்டதாக 35க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் அருகாமையில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில் 10:30 மணி முதல் இருந்தே மாணவிகள் ஏதோ கெமிக்கல் வாசம் வெளியேறுகிறது என்று கூறிய நிலையில் ஏன் இவ்வளவு நேரம் அவர்களை பள்ளியினுள் வைத்தீர்கள் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காதது ஏன் என பெற்றோர்கள் கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசு மருத்துவமனையில் குறுகிய அளவிலான குறைந்த படுக்கைகளே இருப்பதால் ஒரு படுக்கையில் இரண்டு பேர் வீதம் என சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் காற்றோட்ட வசதியும் குறைந்து காணப்படுவதால்  தற்போது வரை 35 மாணவர்கள் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சில மாணவிகளை பெரியோர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

 

MUST READ