- Advertisement -
தமிழ்நாட்டில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையில் இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், வங்கக் கடலில் வருகின்ற 13 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. வடமேற்கு வங்கக்கடல், மத்திய மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
மீனவர்களின் உரிமையை காக்க கடல் உரிமைச்சட்டம் வேண்டும் – செல்வப் பெருந்தகை ஆவேசம்
