கோடை காலங்களில் வெப்பம் அதிகரிக்கும்போது கோடை மழை வருவதும், அதோடு சேர்ந்து ஆலங்கட்டி மழை பெய்வதும் இயல்பு.
கர்நாடகாவில் கடந்தாண்டு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பெங்களூருவில் சில தினங்களுக்கு முன்பு நல்ல மழை பெய்தது.
இந்நிலையில், பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் இன்றும் கனமழை பெய்தது.
அத்துடன், ஒருசில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. சிவாஜி நகர், மெஜஸ்டிக், விதானசவுதா, ஆனந்தராவ் சர்க்கில் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
வட மாவட்டங்களில் தொடரும் ஆலங்கட்டி மழை
அந்த வகையில், கடந்த இரண்டு நாள்களாக வட மாவட்டங்களில் ஆங்காங்கே ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. இன்று, தருமபுரி மாவட்டம் அரூரில் ஐஸ்கட்டிகளாக பெய்த மழையை, மக்கள் வீடியோ எடுத்து பகிர்ந்து வருகின்றனர். நேற்றைய தினம் வேலூர், திருப்பத்தூர் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.