spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்வானிலைஇரவு 1 மணி வரை கனமழை தொடரும் - வானிலை மையம் அறிவிப்பு

இரவு 1 மணி வரை கனமழை தொடரும் – வானிலை மையம் அறிவிப்பு

-

- Advertisement -

இரவு 1 மணி வரை கனமழை தொடரும் - வானிலை மையம் அறிவிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. அடுத்த மூன்று மணி நேரம் வரை மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசையில் இருந்து மேகக்கூட்டங்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதியை நோக்கி நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இரவு ஒரு மணி வரை மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக சாலைகள் மற்றும் குடியிருப்புகள் அமைந்துள்ள தெருக்களில் மழை நீர் ஆங்காங்கே தேங்கியுள்ளது.

ரூ.78.31 கோடி மதிப்பிலான பட்டாபிராம் மேம்பாலத்தின் ஒரு பகுதி மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

we-r-hiring

தி.நகர், நந்தனம், சைதாப்பேட்டை, கிண்டி, அசோக் நகர் உள்ளிட்ட பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்குகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மேலும், சென்னை மற்றும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இரவு ஒரு மணி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

MUST READ