தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.கோவை, நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 10 செ.மீ. மழையும், நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில், 10 செ.மீ., மழையும் பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம் சின்கோனா, சோலையாறு, வால்பாறையில் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 6 செமீ மழையும், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. வேலுார் மாவட்டம் காட்பாடி, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் தலா, 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. கடலூா் மாவட்டம் தொழுதூரில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் மீது, ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, இடி, மின்னல் மற்றும் மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் சென்னை வானிலை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தன்கரை மிரட்டிய மோடி? அடுத்து நடக்கும் அதிரடி! பின்னணியை உடைக்கும் தராசு ஷ்யாம்!