spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்வானிலைகள்ளக்கடல் எச்சரிக்கை நாளை இரவு வரை நீட்டிப்பு

கள்ளக்கடல் எச்சரிக்கை நாளை இரவு வரை நீட்டிப்பு

-

- Advertisement -

தமிழ்நாட்டின் 4 மாவட்ட கடற்கரைகளுக்கான கள்ளக்கடல் எச்சரிக்கை நாளை இரவு 11.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் லேசான கடல் எழுச்சி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

 

கள்ளக்கடல் எச்சரிக்கை நாளை இரவு வரை நீட்டிப்பு

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களின் கள்ளக்கடல் எச்சரிக்கை நாளை இரவு 11.30 மணி வரை தொடர்வதாக இந்திய கடல்சார் தகவல் மையம் அறிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் கடல் அலை அதிக உயரம் எழும்பும் வாய்ப்பு உள்ளது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி 2.5மீ, ராமநாதபுரம் 2.8மீ, நெல்லை, தூத்துக்குடியில் 2.6 மீ உயரம்வரை கடல் அலை எழும்பக்கூடும் என இந்திய கடல்சார் ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கள்ளக்கடல் எச்சரிக்கை நாளை இரவு வரை நீட்டிப்பு

குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையும், ராமநாதபுரம் மாவட்டத்தில் ரோஜ்மா நகர் முதல் தீர்த்தாண்டதானம் வரையும், தூத்துக்குடியில் பெரியதலை முதல் வேம்பார் வரையும், நெல்லையில் குட்டப்புளி முதல் கூடுதலை வரையும் கடல் அலை அதிக உயரம் எழும்ப வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் லேசான அலை எழுச்சி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்கடல் எச்சரிக்கை நாளை இரவு வரை நீட்டிப்பு

சென்னையில் பாலவாக்கம் முதல் லட்சுமிபுரம் ஓடைக்குப்பம் வரையும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலம்பரைக்குப்பம் முதல் சின்ன நீலாங்கரை வரையும், திருவள்ளூரில் பழவேற்காடு முதல் ராயபுரம் வரை லேசான அலை எழுச்சி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்! (apcnewstamil.com)

சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் நாளை மதியம் 1 வரையும், திருவள்ளூரில் நாளை இரவு 7 மணி வரையும் இந்த கடல் எழுச்சி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

MUST READ