Homeசெய்திகள்விராட்-ரோஹித்தின் கேரியரை ஒழித்துக் கட்ட வந்த கவுதம் கம்பீர்..? என்ன நடக்கிறது இந்திய அணியில்..?

விராட்-ரோஹித்தின் கேரியரை ஒழித்துக் கட்ட வந்த கவுதம் கம்பீர்..? என்ன நடக்கிறது இந்திய அணியில்..?

-

- Advertisement -
kadalkanni

இந்திய கிரிக்கெட் அணிக்கும், அதன் ரசிகர்களுக்கும் இது மிகவும் மோசமான கட்டம். ஐசிசி டி20 உலகக் கோப்பையை இந்திய அணியை வென்றதன் மூலம் ராகுல் டிராவிட் தனது பதவிக்காலத்தை முடித்துக் கொண்டார். இதையடுத்து இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நுழைந்தார்.

2024 -ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சாம்பியனாக்குவதில் அவருக்கு பெரும் பங்களிப்பு இருந்தது. இதனால், இந்திய அணிக்கு அவர் பயிற்சியாளராக பலரும் விரும்பினர். ஆனால் கௌதம் தலைமைப் பயிற்சியாளராக ஆனதில் இருந்து இந்தியாவின் ஆட்டம் அவ்வளவு சிறப்பாக இல்லை.

கௌதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார். இந்திய அணி மோசமான நிலையில் உள்ளது. 27 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா இழந்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு எந்த அணிக்கும் எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது இல்லை. வரலாற்றில் முதன்முறையாக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் இந்தியா கோட்டை விட்டது.

இதுபோன்ற பல மோசமான நிலைகளை இந்திய அணி பெற்று வருகிறது. இதனால் இந்திய ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். ராகுல் டிராவிட் இந்திய அணியுடன் இணைந்த காலம் வரை இந்திய அணியால் ஐசிசி போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்று வந்தது. அணியின் செயல்பாடு அபாரமாக இருந்தது. டிராவிட்டின் பதவிக்காலம் முடிவதற்குள் இந்திய அணி ஐசிசி டி-20 கோப்பையையும் வென்றது. ஆனால் கௌதம் கம்பீர் வந்த பின்னால் அனைத்தும் தோல்வியே.சாதனை நாயகன் விராட் கோலியின் ஐ.பி.எல். பயணம்!

இதற்குக் காரணம், கௌதம் கம்பீர் கிரிக்கெட் விளையாடும் அணுகுமுறையை இதுவரை இந்திய வீரர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. கம்பீருக்கும் இந்திய அணி வீரர்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லை. ரோஹித் சர்மா, விராட் கோலியின் செயல்பாடுகளும் கம்பீரின் பயிற்சியின் கீழ் தொடர்ந்து மோசமாக உள்ளது. இரு சீனியர் வீரர்களின் ஆட்டமும் இப்படியே இருந்தால் மற்ற வீரர்களின் ஆட்டம் எப்படி இருக்கும்?

MUST READ