Homeசெய்திகள்உலகம்ஜனநாயக கட்சி: கமலா ஹாரிஸுக்கு ஒபாமா வாழ்த்து

ஜனநாயக கட்சி: கமலா ஹாரிஸுக்கு ஒபாமா வாழ்த்து

-

- Advertisement -

ஜனநாயக கட்சி: கமலா ஹாரிஸுக்கு ஒபாமா வாழ்த்து

கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் நம்பிக்கை!

ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு சிகாகோ நகரத்தில் ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பேசிய அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, “கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் நம்பிக்கை. அமெரிக்கா அவரது தலைமையில் ஒரு புத்திய அத்தியாயத்தைக் காண தயாராக இருக்கிறது” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய பராக் ஒபாமா, “அமெரிக்க அதிபர் தேர்தலில் கடுமையான போட்டி இருக்கும். எனவே அமெரிக்க மக்கள் எந்தத் தவறும் செய்துவிடக் கூடாது. அதனால் வாக்காளர்கள் தாங்கள் எவர் மீது நம்பிக்கை கொண்டுள்ளனரோ அவர்களுக்காக உறுதியாகப் போராட வேண்டும்.

சென்னையில் இன்று தமிழ்நாடு முதலீட்டு மாநாடு… முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

கமலா ஹாரிஸுக்கு அமெரிக்கா ஒரு வாய்ப்பைக் கொடுத்துள்ளது. அதனால் தான் அவர் இன்று அமெரிக்கத் தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் வாழ்நாள் முழுவதும் அமெரிக்கா கொடுத்த வாய்ப்புகளை மீண்டும் நாட்டுக்கு வழங்க அர்ப்பணித்துள்ளார். அந்த அர்ப்பணிப்பை அங்கீகரிக்க நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நான் கமலாவுக்கு ஆதரவாக இயங்க தயாராகிவிட்டேன். ஜனநாயக் கட்சியின் நம்பிக்கை கமலா ஹாரிஸ். அமெரிக்கா அவரது தலைமையில் ஒரு புத்திய அத்தியாயத்தைக் காண தயாராக இருக்கிறது.” என்றார்.

MUST READ