spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்2வது முறையாக மீண்டும் அயர்லாந்து பிரதமரானார் இந்திய வம்சாவளி

2வது முறையாக மீண்டும் அயர்லாந்து பிரதமரானார் இந்திய வம்சாவளி

-

- Advertisement -

இரண்டாவது முறையாக மீண்டும் அயர்லாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த லியோ வரத்கர் தேர்வு செய்யப்பட்டார்.

leo

we-r-hiring

149 உறுப்பினர்களில் 87 எம்.பி.க்களின் ஆதரவைப்பெற்று பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 2017ல் தனது 38வயதில் முதல்முறையாக பிரதமரானார். அயர்லாந்தில் மருத்துவர் பட்டம் பெற்ற லியோ, சிறிது காலம் மருத்துவராக பணியாற்றினார். 43 வயதான இவர், 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஓரினச்சேர்க்கை திருமண வாக்கெடுப்புக்கான பிரச்சாரத்தின் போது, ​​லியோ வரத்கர் ஓரினச்சேர்க்கையாளர் என்பது தெரியவந்தது.

இவர் தனது பதவியேற்பு உரையின்போது, வீட்டுவசதி மற்றும் வாழ்க்கைச் செலவு நெருக்கடியைத் தீர்ப்பதாக உறுதியளித்தார். நாட்டில் உள்ள அனைவருக்கும் பொருளாதார வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றார். அயர்லாந்து பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளி லியோ வரத்கருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

MUST READ