Homeசெய்திகள்உலகம்"மலேசியா செல்லும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை"!

“மலேசியா செல்லும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை”!

-

 

"மலேசியா செல்லும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை"!
File Photo

டிசம்பர் 01- ஆம் தேதி முதல் மலேசியாவிற்கு வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்று மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

சுண்டைக்காயின் மருத்துவ பயன்கள் பற்றி அறிவோம்!

சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிப்பது மற்றும் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தி வரும் மலேசியா அரசு வரும் ஆண்டுகளில் விசாவில் பல்வேறு வசதிகளைக் கொண்டு வரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இருந்து முதலீட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் விதமாக, வரும் டிசம்பர் 01- ஆம் தேதி முதல் விசா இன்றி மலேசியாவுக்கு செல்லலாம். சுமார் 30 நாட்கள் வரை மலேசியாவில் விசா இன்றி தங்கிக் கொள்ளலாம் என்று மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

சளி, இருமலுக்கு மருந்தாகும் தூதுவளை துவையல்!

இந்த திட்டம் அடுத்தாண்டு நவம்பர் 30- ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் மலேசியா அரசு தெரிவித்துள்ளது.

MUST READ