
ரஷ்யாவில் இருந்து அரசுமுறைப் பயணத்தை முடித்து வடகொரிய அதிபர் மீண்டும் நாடு திரும்பினார்.
லெக்ராஞ்சியின் புள்ளியை நோக்கிய பயணத்தைத் தொடங்கிய ஆதித்யா- எல்1 விண்கலம்!
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், கடந்த செப்டம்பர் 12- ஆம் தேதி ரயில் மூலம் ரஷ்யா சென்றார். ரஷ்ய அதிபர் புதினைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய அவர், அங்கு நடைபெற்ற ராணுவ உச்சிமாநாட்டிலும் கலந்து கொண்டார்.
போர் விமானங்கள், ஏவுகணைகள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்டவற்றையும் வடகொரிய அதிபர் பார்வையிட்டார். உக்ரைன் போரைக் கருத்தில் கொண்டு வடகொரியாவிடம் இருந்து ஆயுதம் வாங்க ரஷ்யா முனைப்புக் காட்டி வருவதாகக் கூறப்படும் நிலையில், வடகொரிய அதிபரின் ரஷ்ய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் இன்று சிறப்புக் கூட்டத்தொடர்!
மேலும், ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய வடகொரிய அதிபர், அங்கு நடைபெற்ற ராணுவ கண்காட்சியில் பங்கேற்று நவீன ஆயுதங்களைப் பார்வையிட்டார். இந்த நிலையில், தனது ஆறு நாள் அரசுமுறைப் பயணத்தை முடித்துக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன் ரயில் மூலம் வடகொரியாவுக்கு திரும்பினார். ரஷ்ய ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் அவர் வழியனுப்பி வைக்கப்பட்டார்.