spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்பெருவில் வெள்ளம்; அவசர நிலை பிரகடனம்

பெருவில் வெள்ளம்; அவசர நிலை பிரகடனம்

-

- Advertisement -

பெருவில் வெள்ளம்; அவசர நிலை பிரகடனம்

பெருவை புரட்டிப்போட்ட கனமழையால் பல்வேறு பிராந்தியங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது

புரட்டிப்போட்ட யக்கு புயலால் மக்கள் தவிப்பு

வடக்கு பெருவில் யாக்கூ புயல் கோர தாண்டவம் ஆடி வருகிறது. கொட்டி தீர்க்கும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை மழைவெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக லாம்பேய்க், தும்பெஸ், பியூரா உள்ளிட்ட நகர சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்திருப்பதால், மக்கள் பாதுகாப்பு கருதி குடும்பத்துடன் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

we-r-hiring
கனமழைக்கு 6 பேர் பலி; 5 பேரை தேடும் பணி தீவிரம்

கனமழையால் அதிக பாதிப்புக்குள்ளான தும்பெஸ் முதல் லிமா வரையிலான பகுதிகளில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பெருவின் வடக்கு மாகாணங்களில் கோர முகத்தை காட்டிய யக்கூ புயல், தெற்கு மாகாணங்களை நோக்கி நகர்வதால், மீட்பு பணிக்காக ஏராளமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். கனமழைக்கு இதுவரை 6 பேர் உயிரிழந்த நிலையில், காணாமல் போன 5 பேரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

MUST READ