துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

துருக்கியின் காசியண்டெப் மாகாணம் நுர்தாகி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் சக்திவாந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.8 ஆக பதிவானது. துருக்கி- சிரியா எல்லையில் ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கி 53 பேர் உயிரிழந்தனர்.
இதேபோல் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர். அதிகாலை நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் தூக்கத்தில் இருந்த மக்கள் கட்டிடத்துக்குள் சிக்கினர். இதனால் மக்கள் தப்பித்து ஓட வலியில்லாமல் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.