spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்மாவட்டம்26 கிராம் தங்க சங்கிலி - திருடிய பெண்ணுக்கு வலை

26 கிராம் தங்க சங்கிலி – திருடிய பெண்ணுக்கு வலை

-

- Advertisement -

பொன்னேரியில் நகைக்கடையில் நகை வாங்குவது போல நடித்து 26 கிராம் தங்க சங்கிலி திருடிய பெண். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

we-r-hiring

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இயங்கி வரும் நகைக்கடையில் பெண் ஒருவர் தங்க சங்கிலி வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது கடையில் இருந்த பணியாளர் தங்க சங்கிலிகளை காட்டியுள்ளார்.

நீண்ட நேரம் தங்க சங்கிலிகளை பார்த்த பெண் மாடல் பிடிக்கவில்லை என கூறி நகை ஏதும் வாங்காமல் திரும்பி சென்று விட்டார். சந்தேகமடைந்த கடையின் உரிமையாளர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார்.

அப்போது கடையில் வேறு மாடல் நகைகளை காண்பிக்குமாறு பணியாளரை திசை திருப்பி அக்கம் பக்கத்தில் யாரும் பார்க்கிறார்களா என நோட்டமிட்டு தங்க சங்கிலியை லாவகமாக தனது மடியில் போட்டு சேலையில் சுருட்டு மறைத்து கொண்டு அந்த பெண் திருடி செல்கிறார்.

இதனையடுத்து கடையின் உரிமையாளர் ராகவன் 26 கிராம் தங்க சங்கிலியை திருடிய பெண் மீது நடவடி‌க்கை எடு‌க்குமாறு பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து நகைக் கடையில் திருடிய பெண்ணை வலை வீசி தேடி வருகின்றனர்.

MUST READ