திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்த மப்பேட்டில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை ராட்வீலர் நாய் துரத்தி கடித்து குதறியதில் சிறுமி காயமடைந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு கேகே நகர் பகுதியை சேர்ந்தவர் லலித் குமார்- துர்கா பிரியா இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் இருந்து வருகின்றது. இவர்களுடைய இரண்டாவது மகள் சந்திரகா(6) அங்குள்ள அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இன்றைய தினம் சந்திரிகா பள்ளிச் சென்று மாலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது துர்கா பிரியா தனது கைக்குழந்தை மற்றும் இரண்டாவது மகளான சந்திரிகாவை தனது தோழி பிரியா என்பவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று வீட்டின் வெளியே பேசிக் கொண்டுள்ளார்.

தாய் துர்காப்ரியா பிரியாவிடம் பேசிக் கொண்டிருந்த போது சிறுமி சந்திரகா அவர் வீட்டின் அருகே ராட்வீலர் நாய் கட்டி வைத்திருந்த பகுதிக்குச் சென்று விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது சிறுமி சந்திரா நாய் மீது சிறிய கல் கொண்டு எறிந்துள்ளார். மரத்தில் கயிற்றால் கட்டி வைக்கப்பட்டிருந்த நாய் கயிற்றை அறுத்து வந்து சிறுமி சந்திரிகாவை பாய்ந்து கடிக்க வந்துள்ளது.
சிறுமி சந்திரிகாவை நாய் துரத்தியதால் தாய் துர்கப்பிரியா தனது மகளை தூக்கிக் கொண்டு பிரியா வீட்டிற்குள் ஓடி மறைந்துள்ளார். பிரியா நாயை இறுக்கமாக பிடித்தும் கயிறை உருவிக் கொண்டு வீட்டில் பதுங்கி இருந்த சிறுமியை ராட்வீலர் நாய் குதறி கடித்துள்ளது. சிறுமையை நாய் கடித்து குதறுவதைக் கண்ட தாய் கத்தி கூச்சலிடவே அருகில் இருந்து ஓடி வந்த இளைஞர் ஒருவர் நாயை நோக்கி இரும்பு ராடு அடிக்க முயன்ற போது நாய் சிறுமியை விட்டு ஓடி உள்ளது.
பிறகு அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வர வைத்து திருவள்ளூர் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். வயிற்று கால் பகுதியில் ராட்வீலர் நாய் கடித்ததில் தையல் போடப்பட்டு சிறுமி அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை ராட்வீலர் நாய் புரட்டிப் புரட்டி கடித்து சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் மப்பேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராட்வீலர் இன நாய்கள் மிக பயங்கரமான நாய் என்பதால் அத்தகைய நாய்களை இறக்குமதி செய்யவும், விற்கவும், இனப்பெருக்கம் செய்யவும், இந்திய அரசாங்கம் ஏற்கெனவே தடை விதித்துள்ளது. அதையும் மீறி சிலர் விற்பனை செய்வதும் அத்தகைய நாயை உரிமையாளர்கள் வளர்த்தும் வருகின்றனர்
நேற்றைய தினம் திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தெய்வானை தனது மகளை தமிழ் நிலாவை திருவள்ளூரில் உள்ள தாய் வீட்டுக்கு அழைத்துச் சென்றபோது நாய் குழந்தையின் காலை கவ்வி கடித்து இழுத்து ஆடையை உருவியது. அதேபோன்று திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கம் பகுதியில் விஜின் கார்டன் குடியிருக்கும் சூரிய பிரகாஷ் -ஆர்த்தி தம்பதியினரின் ஏழு வயது சிறுமி யாழினி நேற்று காலை பள்ளி வாகனத்திற்காக காத்திருந்த போது தெரு நாய் கடித்து குதறியதில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மூன்று சிறுமிகளை நாய் கடித்து காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மீட்பு பணிக்கு சென்ற பட்டாலியன் போலீசார் பாலியல் விவகாரத்தில் கைது…