spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு

-

- Advertisement -

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவுவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து சாதி சார்ந்த சொற்களை பயன்படுத்தி பாடல் பாடினார்.

அந்த பாடலில் சண்டாளன் என்ற வார்த்தை இருந்தது. அதற்கு ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

அதே பாடலை சீமானும் பாடி, முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என்று சவால் விட்டார்.

we-r-hiring

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு

 

இந்த நிலையில் ஆவடி அருகே பட்டாபிராமை சேர்ந்த அஜேஷ் என்பவர் சீமான் மீது கடந்த 16.07.2024 அன்று புகார் அளித்தார். அந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் அதில் வழக்கு பதிவு செய்ய மறுத்தனர்.

அதனை தொடர்ந்து புகார் தாரர் SC/ST ஆணையத்திற்கு சென்று புகார் அளித்தார். ஆணையத்தின் விசாரணைக்கு ஆஜரான பட்டாபிராம் காவல் ஆய்வாளர் ஜெகநாதனை கண்டித்தது. மேலும்  ஆகஸ்டு 30 ஆம் தேதி சீமான் மீது வழக்கு பதிவு செய்து செப்டம்பர் 2 ம் தேதி ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி புதூர் ராஜாவின் கூட்டாளி கைது

அதன் அடிப்படையில் இன்று 31-08-2024 சீமான் மீது பட்டாபிராம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

MUST READ