spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்!

-

- Advertisement -

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழ்நாட்டில் மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்து, இது தொடர்பான கோரிக்கை மனுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த சந்திப்பின்போது, சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2-ம் கட்டத்திற்கான நிதி, சமக்ர சிக்ஷா திட்டத்துக்கு நிலுவைத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

we-r-hiring

இதனை தொடர்ந்து, டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னை திரும்பினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை , விமான நிலையத்தில் அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

மேலும் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமினில் வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் முதலமைச்சரை நேரில் வரவேற்றார். அப்போது, செந்தில் பாலாஜி முதலமைச்சரின் காலில் விழுந்து வாழ்த்து பெற்றார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் புறப்பட்டு சென்றார்

 

MUST READ