Homeசெய்திகள்சினிமாவைபவ் நடிப்பில் உருவாகும் 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' பட ட்ரெய்லர் வெளியீடு!

வைபவ் நடிப்பில் உருவாகும் ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ பட ட்ரெய்லர் வெளியீடு!

-

- Advertisement -

வைபவ் நடிப்பில் உருவாகும் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.வைபவ் நடிப்பில் உருவாகும் 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' பட ட்ரெய்லர் வெளியீடு!

நடிகர் வைபவ், வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா, கோவா, சென்னை 600028 – 2 ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதே சமயம் இவர் மேயாத மான், கப்பல், லாக்கப், மலேசியா டு அம்னீசியா போன்ற படங்களை ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். கடைசியாக இவரது நடிப்பில் ரணம் எனும் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் வைபவ். இந்த படத்தில் வைபவுடன் இணைந்து ஆனந்தராஜ், அதுல்யா ரவி, ரெடின் கிங்ஸ்லி, இளவரசு, லிவிங்ஸ்டன் ஜான் விஜய், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். காமெடி கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தினை விக்ரம் ராஜேஸ்வர் மற்றும் அருண் கேசவ் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.

we-r-hiring

பி டி ஜி யுனிவர்சல் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்திருக்கும் நிலையில் டி. இமான் இதற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து டீசரும் அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லர் ரசிகர்களின் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ