spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாபுதுச்சேரியில் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்

புதுச்சேரியில் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்

-

- Advertisement -

புதுச்சேரியில் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்புதுச்சேரியில் தலைமை செயலாளர் சரத் சவுகான் உத்தரவு படி உயர் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்  செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியில் இருந்து புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட டிஐஜி சத்தியசுந்தரத்திற்கு, சட்டம்- ஒழுங்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றிய பிஜேந்திர சிங் யாதவ் ஆயுதப்படை மற்றும் போலீஸ் பயிற்சி பள்ளி டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

we-r-hiring

அதே போன்று சட்டம்- ஒழுங்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா குற்றம்- புலனாய்வுத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய கலைவாணன் சட்டம் ஒழுங்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி கிழக்குப் பகுதி எஸ்பி லட்சுமி, காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளராக (சட்ட ஒழுங்கு) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட ஈஷாசிங் கிழக்குப் பகுதி எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் சரத் சவுகான் பிறப்பித்துள்ளார்.

Image

 

 

மத்திய அரசு பணிகளுக்கு தேர்வான  51,000 பேருக்கு நியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

MUST READ