spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா34 ஆண்டுகளுக்கு பிறகு பிரபல இயக்குநருடன் இணையும் ரஜினிகாந்த்- சூப்பர் அப்டேட்

34 ஆண்டுகளுக்கு பிறகு பிரபல இயக்குநருடன் இணையும் ரஜினிகாந்த்- சூப்பர் அப்டேட்

-

- Advertisement -

வயதாக வயதாக படங்களின் எண்ணிக்கையையும் உயர்த்திக் கொண்டே போகிறார் ரஜினிகாந்த். லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. தங்கக் கடத்தல் பின்னணியை வைத்து உருவாகும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளார்.

கூலி திரைப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூலி படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்த கையோடு, நெல்சன் இயக்க உள்ள ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளார் ரஜினி. இப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது.'ஜெயிலர் 2' படத்தின் ப்ரோமோ ஷூட் இன்று தொடக்கம்!

we-r-hiring

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம், ஜெயிலர். இந்த படத்தில் ரஜினிகாந்துடன் கேமியோ கதாபாத்திரங்களில் சிவராஜ்குமார், மோகன் லால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம், ரஜினியின் சமீப கால ஹிட் படங்களுள் ஒன்றாக அமைந்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. நெல்சன்தான் இந்த படத்தையும் இயக்க இருக்கிறார். இந்த படத்திற்கு ஹுக்கும் என்று பெயரிட இருப்பதாக கூறப்படுகிறது. கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய படங்களில் நடித்து முடித்த பிறகு, ரஜினிகாந்த் ஒரு பிரபல இயக்குநருடன் இணைய இருக்கிறார்.

ரஜினிகாந்தை வைத்து 1991ஆம் ஆண்டில் தளபதி படத்தை இயக்கியவர், மணிரத்னம். தற்போது, கிட்டத்தட்ட 34 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் மீண்டும் ஒரு படத்தில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களின் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, ரஜினியின் பிறந்தநாளையொட்டி, டிசம்பர் 12ஆம் தேதியன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Maniratnam - மணிரத்னம்
                                                                                                                  இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தற்போது தக் லைஃப் திரைப்படம் உருவாகி இருக்கிறது. கமல்ஹாசன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என மிகப்பெரிய நட்சத்திர படையே நடித்திருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். தக் லைஃப் திரைப்படம் வருகிற 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது. அப்படம் ரிலீஸ் ஆன பின் ரஜினி பட பணிகளை தொடங்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளார்.

MUST READ