அதிமுக உடன் கூட்டணி அமைப்பதில் பாஜக மேலிடம் தீவிரமாக உள்ளதாகவும், அதற்கு அண்ணாமலை எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என்பதற்காகவே அவருக்கு நெருக்கமானவர்களுடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாகவும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையின் முழு பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது :- திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், அவரது மகன் கதிர்ஆனந்த் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றுள்ளது. இந்த சோதனை 2019ஆம் ஆண்டு தேர்தல் தொடர்பாக பதியப்பட்ட வழக்கில் சோதனை என்கின்றனர். ஆனால் தற்போது புதிதாக பல வழக்குகள் இருக்கு. துரைமுருகன் தொடர்புடைய துறையில் குவாரிகளில் சோதனை நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக 6 மாவட்ட ஆட்சியர்கள் ஏற்கனவே விசாரணைக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். அதை எதிர்த்து தமிழ்நாடு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றம் சென்றனர். வழக்கு விசாரணைக்கு வர வேண்டும் என்றனர். அந்த பிராசஸ் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தான் தற்போது அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றுள்ளது.

ஆனால் எனது பார்வையில் இது ஒரு தொடர் ரெய்டு என்று தான் பார்க்கிறேன். ஏற்கனவே அமைச்சர் சக்கரபாணி என்பவர், அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார். அரவக்குறிச்சி தேர்தல் செலவுக்கு கொடுத்த பணத்தில் அண்ணாமலை ஒரு குவாரி நடத்துகிறார். அண்ணாமலை, அவரது மைத்துனர் சிவகுமார், செந்தில் ஆகியோர் இணைந்து நடத்துகின்றனர். கோடிகள் மதிப்புடைய நிலத்தை சில லட்சங்களுக்கு பதிவு செய்கின்றனர். இதுவே பதிவுத்துறை முறைகேடு. அந்த நிலத்தில் கருங்கல் மற்றும் செம்மண் குவாரி அனுமதி இன்றி நடைபெற்று வருகிறது. இது துரைமுருகனுக்கு தொடர்புடைய துறை. இதனை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது. மேலும், உக்ரைனில் இருந்து முறைகேடாக கருவிகள் இறக்குமதி செய்துள்ளனர். அது மத்திய அரசு, நிர்மலா சீதாராமன் தொடர்புடைய விவகாரம். அந்த இயந்திரங்களில் செங்கல் தயாரித்து பல நுறு கோடிக்கு விற்பனை செய்துள்ளனர். அதற்கு கொடுக்கப்பட்ட ரூ.50 கோடி மதிப்பிலான மணல் இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளது. மணல் ஆபரேட்டரான கரிகாலன் அதனை வழகினார். அந்த நிறுவனத்துக்கு 5.6 கோடி டிக் நிறுவனம் கடன் வழங்கியுள்ளது. தங்கம் தென்னரசு துறை.
அதுமட்டுமின்றி அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிடும்போது மணல் மாஃபியா ரூ.150 கோடி கொடுக்கிறது. பல்லடத்தில் பணம் டிஸ்ட்ரிபியூட் செய்தவர்களை உளவுத்துறை துப்பாக்கி முனையில் விரட்டி அடித்தது. தமிழக அரசுக்கு எதிரான அண்ணாமலைக்கு பணம் கொடுக்கிறீர்கள் என திமுக கேட்கிறது. அப்போது, கொடுக்க சொன்னது திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தான் என்கின்றனர். அப்போ துரைமுருகனுக்கும், அண்ணாமலைக்கும் நெக்சஸ் அதிகம். சக்கரபாணிக்கு நெருக்கமான செந்தில், அண்ணாமலை மைத்துனர் சிவகுமாரின் தொழில் பார்ட்னர் ஆவார். அவர்கள் நடத்தும் செங்கல்சூளையில் 240 கோடி முறைகேட்டை கண்டுபிடிக்கிறது வருமான வரித்துறை. ஏற்கனவே கோவை அண்ணப்பூர்ணா உணவக உரிமையாளர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்க வைக்கப்பட்ட விவகாரத்துக்கு, அண்ணாமலை லண்டனில் இருந்து எதிர்ப்பு தெரிவித்தார். நிர்மலா சீதாராமனுக்கும், வானதி சீனிவாசனுக்கும் எதிர்ப்பை தெரிவித்தார். அந்த பிரச்சினையும் உள்ளது.

இப்போது அவர் வீட்டில் முழுமையான சோதனை. இதற்கு அடுத்தபடியாக அண்ணாமலைக்கு நெருக்கமாக உள்ள துரைமுருகன் வீட்டில் சோதனை நடைபெற்றது. ஏற்கனவே அவர் மீது குவாரி கேஸ் உள்ளது. அதன் தொடர்ச்சியாக இந்த சோதனை நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து, திருச்சியில் செந்தில் ரியல் எஸ்டேட் செய்கிறார். இதற்கு மீசைக்கார அமைச்சர், கோபக்கார அமைச்சர் தான் காரணம். அவர் வீட்டிலும் சோதனை நடைபெறும். இதற்கு பின்னர் பத்திரப்பதிவு துறையில் உதவியவர்கள், நிலம் வாங்க உதவியவர்கள், லோன் வாங்கி கெடுத்தவர்கள் என இன்னும், ஈரோடு கிழக்கு தேர்தலுக்கு முன்பு திமுகவை சேர்ந்த 5 அமைச்சர்களை அமலாக்கத்ததுறை குறிவைத்துள்ளனர். அதில் முழுக்க பாதிக்கப்பட போகிறவர்கள் அண்ணாமலைக்கு நெருக்கமானவர்களை தேர்வு செய்துள்ளனர். ஏனென்றால் ஈரோடு கிழக்குத் தேர்தலில் பாஜக, அதிமுகவுடன் கிழக்குத் தேர்தலில் கூட்டணி வைக்க உள்ளது. அதற்கு அண்ணாமலை எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என்று அவரை சைலண்ட் செய்வதற்காக, அவருடைய ஆட்களை குறிவைத்துள்ளனர்.
அண்ணாமலை மீது அவர்களது கட்சியினரே அமித்ஷாவிடம் வைத்த புகாரில் அண்ணாமலை திமுக அமைச்சர்களை மிரட்டி பணத்தை வாங்கி நிறைய சொத்துக்களை சேர்த்துவிட்டார் என்பது தான். அப்போது, அவருடன் தொடர்பில் உள்ள அமைச்சர்கள் யார்? என்று நடைபெற்ற சோதனைதான் இதுதான் எனது கணிப்பு. இதனுடைய பின்விளைவுகள் மிகவும் பெரியது. தற்போது தமிழ்நாட்டில் மணல் எடுக்கவில்லை. கரிகாலன் உள்ளிட்ட இருவருக்கு இடையே போட்டி காரணமாக நின்று கொண்டிருக்கிறது. இன்னும் சரியாகவில்லை. தமிழ்நாட்டில் மணல் கடத்தல் முலம் ஆண்டுக்கு ரூ.23 ஆயிரம் கோடி வருமானம் வரும் பிசினஸ். அதன் முலம் நிறைய பேருக்கு பணம் கொடுக்கிறார்கள். யார் ஆளும் கட்சியாக இருந்தாலும் இதுதான் நடைபெறும். சவுடுமணல், பில்டிங் இடிப்பு மணல் உள்ளிட்டவற்றுக்கு கரிகாலன் அனுமதியின்றி கொண்டு செல்ல முடியாது. கிருஷ்ணகிரியில் ஒரு மலையை உடைத்தால் குறைந்த செலவுதான். எம் சாண்ட் ஆனால் ஆயிரம் ரூபாய், அதனை கர்நாடகாவில் கொண்டுசென்று விற்றால் 60 ஆயிரம் ரூபாய். கேரளாவில் மணலுக்கு தட்டுப்பாடு. இதனால் கன்னியாகுமரியில் இயற்கை வளம் கொள்ளை அடிக்கப்படுகிறது. இதனை தடுத்த அதிகாரியை மாற்றி விட்டனர். இது மிகப்பெரிய மாபியா.
பாஜக தலைமை நினைத்தால் அண்ணாமலையை மாற்றிவிட்டு, அவர்களுக்கு சாதகமான தலைவரை கொண்டுவந்து அதிமுக உடன் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் தான். ஆனால் அங்கு தான் அண்ணாமலை டிரிக் பிளே பண்ணுகிறார். அண்ணாமலை, செந்தில் பாலாஜியை ஏன் தூக்கி உள்ளே வைக்கிறார் என்றால், தமிழ்நாட்டில் கவுண்டர்கள் தான் தொழிலில் அதிகம் ஈடுபடுகின்றனர். தமிழகத்தில் வட்டிக்கு பணம் கொடுப்போர் அதிகம் உள்ள இடம் கரூர். எடப்பாடி கவுண்டர்களின் தலைவராக உருவெடுக்கிறார். அதற்கு போட்டியாக உள்ளவர்கள் யார் என்றால் அண்ணாமலை, செந்தில்பாலாஜி. அண்ணாமலை ஒரு பெரிய இண்டஸ்ட்ரியல் நெட் ஒர்க்கை உருவாக்குகிறார். வருமான வரித்துறை ரெய்டு வரும், இடி ரெய்டு வரும் என மிரட்டி ஆயிரக்கணக்கான கோடிகளை சம்பாதித்து விட்டார். லண்டனில் ஒரு அமைச்சர் ரூ.300 கோடி அண்ணாமலைக்கு கொடுக்கிறார். இப்படி பல்வேறு விதமாக சம்பாதித்த பணத்தை எல்லாம் அவரது மனைவி அகிலாவின் பெயரில் ஷேரில் சர்வதேச அளவில் போலி நிறுவனங்களில் முதலீடு செய்கின்றனர். அண்ணாமலையை நீக்கினால், அவர் ஒரு தனிக்கட்சியை தொடங்கி, கொங்கு மண்டலத்தில் உள்ள பாஜகவின் செல்வாக்கை பறித்துவிடுவார். அந்த கட்சிக்கு கொங்குநாடு ஜனதா கட்சி என்பது பெயர். கொங்கு மண்டலத்தில் உள்ள தங்களது செல்வாக்கை இழக்கக்கூடாது என்பதால் தான் அண்ணாமலை மீது பாஜக தலைமை நடவடிக்கை எடுக்கவில்லை.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தலைமை அதிமுக கூட்டணிதான் சிறந்தது என நினைக்கிறது. அண்ணாமலை 20 எம்.பி தொகுதிகள் ஜெயிப்பேன், 18 சதவீத வாக்குகள் பெற்றுள்ளேன் என்கிறார். டிடிவி, ஏசி சண்முகம், நயினார் நாகேந்திரன், தமிழிசை போன்ற அக்கட்சியின் மூத்த தலைவர்களுக்கு கிடைத்த வாக்குகள் என்பது பிறழ் வாக்குகள். நாடாளுமன்ற தேர்தல் என்பதற்காக அதிமுககார்கள் போட்ட வாக்குகள் அது. இந்த வாக்குகள் சட்டமன்ற தேர்தலில் செல்லாது. சட்டமன்ற தேர்தல் என்றால் பாமக கண்டிப்பாக அதிமுக கூட்டணிக்கு சென்று விடும். பாமக இல்லாத பாஜக என்பது ஒன்றுமில்லாதது. குறைந்தபட்ச வாக்குகளுக்கான கியாரண்டி கூட கிடைக்காது. இதனால் பாஜக தனியாக நின்றால், நோட்டாவுடன் தான் போட்டியிட வேண்டும். அதிமுகவுக்கு 4 மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளனர். பல்வேறு மசோதாக்கள் கொண்டுவர அவர்கள் ஆதரவு, மத்திய அரசுக்கு தேவை. அதிமுகவில் இன்னும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் தேர்வாக வாய்ப்பு உள்ளது. இதனை எல்லாம் கேவை சேர்ந்தவரும், மகாராஷ்டிரா ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் யோசிக்கிறார். அவர் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணியுடன் மிகவும் நெருக்கமானவர் ஆவார்.
பாஜக அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் மைனாரிட்டி வாக்கு போய்விடும் தான். இப்படியே விட்டால் திமுக எளிமையாக வெற்றி பெற்றுவிடும் என்பது சி.பி.ராதாகிருஷ்ணனின் கணிப்பு ஆகும். அதனால் பாஜக, அதிமுக கூட்டணி அவசியம். பாஜக கூட்டணிக்குள் டிடிவி தினகரன், சசிகலா, ஒபிஎஸ். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக 75 இடங்களில் வெற்றி பெற்றது, 50 இடங்களில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்த இடங்களில் அமமுக கணிசமான அளவு வாக்குகளை பெற்றிருந்தது. கணக்குப்பார்த்தால் அதிமுக, அமமுக சேர்ந்தால் 100 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என சி.பி.ஆர். எண்ணுகிறார். குறைந்தபட்சம் எதிர்க்கட்சி, சிறிது முயற்சி செய்தால் ஆளுங்கட்சி என்பது அவரது கணிப்பு. பாஜக தனி அணியாக இவர்களை சேர்த்துக்கொண்டு வருவது போலவும், அவர்களுடன் அதிமுக கூட்டணி வைப்பது என்றும் திட்டம். கடந்த முறை அமித்ஷாவும் இந்த பார்முலாவை தான் முன்வைத்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை. டிடிவி, ஓபிஎஸ் போன்றோருக்கு வாய்ப்பு வழங்க அவர் விரும்பவில்லை. ஆனால் சிபிஆர் முன்பு அண்ணாமலையால் நிற்க முடியாது.

பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டால் அண்ணாமலைக்கு எதிர்காலம் என்பதே கிடையாது. அண்ணாலை சேர்த்து வைத்த ஆயிரக்கணக்கான கோடிகளை வைத்துக் கொண்டு ஒட வேண்டியதுதான். ஆனால் உடனடியாக அவரை நீக்க முடியாது. அண்ணாமலையை வளர்க்க 150 கோடியை ஆர்.எஸ்.எஸ் செலவு செய்துள்ளது. திராவிட தத்துவத்தை அழிக்க வேண்டும் என்பதற்காக அண்ணாமலையை வளர்த்து எடுக்க, அவ்வளவு செலவு செய்துள்ளனர். ஆனால் தோல்வி அடைந்துவிட்டது. அதனை உணர்ந்ததால் தான் ரெய்டு மேல ரெய்டு வைத்துக் கொண்டிருக்கின்றனர். அண்ணாமலை, அவரது மனைவி, உறவினர்கள் என அனைவருக்கு எதிரான ஆதாரங்களை நிர்மலா சீதாராமன் திரட்டி வைத்துள்ளார். ஓரு எப்ஐஆர் போட்டால் முடிந்துவிடும். ஆனால் அவ்வளவு சீக்கிரமாக அவர் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.
தமிழ்நாட்டு தலைவரை தேர்வு செய்யும் பொறுப்பு நிர்மலா சீதாராமன் கையில் தான் உள்ளது. பாஜகவுக்கு தேசிய தலைவரை தேர்வு செய்ய வேண்டி அவசியம் உள்ளது. தேவேந்திர பட்னாவிஸ் தலைவராக வர வேண்டி இருந்தது. ஆனால் அவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் ஆகி விட்டார். அவர் இருந்திருந்தால் அவர்தான் பாஜக தலைவராகி இருப்பார். பாஜக தலைமையை கைப்பற்றுவதில் மகாராஷ்டிரா ஆர்.எஸ்.எஸ்-க்கும், குஜராத் பாஜகவுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. அந்த பிரச்சினை சரிசெய்ய முயற்சிக்கின்றனர். இதனால் பாஜகவின் தேசிய தலைமை மாற்றப்பட உள்ளார். அதில் அண்ணாமலையை மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வரும் தை மாதம் பிறந்தால் அண்ணாமலைக்கு வழி திறக்கும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.