spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவிஜயின் பாஜக உறவு! உச்சநீதிமன்றத்தில் தெரிந்த உண்மை! எஸ்.பி.லட்சுமணன் நேர்காணல்!

விஜயின் பாஜக உறவு! உச்சநீதிமன்றத்தில் தெரிந்த உண்மை! எஸ்.பி.லட்சுமணன் நேர்காணல்!

-

- Advertisement -

2026ல் விஜய் அதிமுக – பாஜக கூட்டணிக்கு வந்தால் அது அதிமுகவுக்கு தான் பலமாக இருக்கும். அதே வேளையில் விஜய் என்கிற பிம்பம் உடைபடும் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

கரூர் துயர சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் விவரங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்ததாவது:- சென்னை உயர் நீதிமன்றம் எஸ்.ஐ.டி அமைத்துள்ளதற்கு எதிராகவும், சிபிஐ விசாரணை கோரியும் தொடரப்பட்ட மனுக்களின் மீதான தீர்ப்பு நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப் பட்டிருக்கிறது. இந்த சம்பவம் நடைபெற்றது கரூர் என்பதால், இது உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் வரம்புக்குள் வரும்.

அப்போது எதற்காக சென்னை முதன்மை அமர்வு நீதிபதி வழக்கை விசாரணைக்கு எடுத்தார்? எந்த சூழலில் எடுத்தார்? முதன்மை அமர்வுக்கு என்று சில தனித்த அதிகாரங்கள் இருப்பது புரிகிறது. அதை தங்களுக்கும் சொல்லுங்கள். அந்த விளக்கத்தின் அடிப்படையில் தாங்கள் முடிவுகளை சொல்கிறோம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதனால் நீதிபதி செந்தில்குமாரிடம் கேட்டோ, அல்லது உயர்நீதிமன்ற பதிவாளரிடம் கேட்டோ வழக்கு பட்டியலிடப்பட்டதற்கான விவரங்களை எழுத்துப்பூர்வமா தாக்கல் செய்வார்கள்.

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கூடாது - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்..!

கரூர் சம்பவத்தில் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் தார்மீக அடிப்படையில் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் இந்த வழக்கில் தவெகவின் தலைவராக விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு தார்மீக பொறுப்பு இருந்திருக்க வேண்டும். அது குறித்து அவர்கள் துளியும் கவலைப்படவில்லையே என்று பார்க்க வேண்டும். ஒரு கட்டத்தில் கரூர் சம்பவத்தில் பாடம் கற்றுக்கொண்டு கடந்து சென்றுவிட வேண்டும். இந்த விவகாரத்தில் காவல்துறையும் தவறு செய்தது யாருமே அதை மறுக்கவில்லை. ஆனால் நான் எதுவுமே செய்யவில்லை என்று விஜய் சொன்னபோது தான் காவல்துறை செய்த தவறுகள் எல்லாம் கீழே போய்விட்டது.

எங்கேயும் நடக்காதது கரூரில் நடைபெற்றுள்ளது என்று சொல்வதன் மூலம் அங்கே சதி நடந்துவிட்டது என்பதை மறைமுகமாக ஆமோதித்தார். சரி அப்படி செய்தீர்களே அதற்கான ஆதாரத்தை வெளியிட்டீர்களா? நீங்கள் எவ்வளவு டிரோன்கள் வைத்து காட்சிபடுத்தினீர்கள். ஏதோ ஜனநாயகன் படத்திற்கு அந்த காட்சிகளை பயன்படுத்துகிறீர்கள் என்றெல்லாம் வதந்திகள் பரவுகிறது. அது குறித்து நமக்கு கவலை இல்லை. ஆனால் கட்சி நிகழ்ச்சிக்காக நீங்கள் எடுத்த வீடியோக்களை காட்சிப்படுத்தினீர்களே, அதில் சதிக்கான ஆதாரங்கள் இருந்தால் அதை வெளியிட்டிருக்க வேண்டாமா?

நட்பை ஆவணங்களால் நிரூபிக்க முடியாது – சென்னை உயர்நீதி மன்றம்

ஆனால் போகிற போக்கில் கத்தியால் குத்திவிட்டார்கள். கழுத்தை நெரித்துக்கொன்று விட்டார்கள் என்று சமூக வலைதளங்களில் சொன்னது போன்று ஒரு தலைவரும் மறைமுகமாக பேசினால்? அப்படி பேசுபவர்களை மறைமுகமாக ஆதரித்தால் ஒரு தலைவனுக்குரிய பொறுப்பு எங்கே உள்ளது? உச்சநீதிமன்றத்தில் தவெக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நடைபெற்றது விபத்து தான். அதை தாங்கள் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார். அப்போது சதிதான் என்று சொன்ன விஜய் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்பாரா?

இந்த விவகாரத்தில் 2 விஷயங்கள் தான் நடக்கும். ஒன்று தனி நீதிபதி, குறிப்பிட்ட பார்வையில் தான் வழக்கை விசாரித்தார் என்கிற அடிப்படையில் வழக்கை கடந்து செல்வார்கள். அல்லது தனி நீதிபதியின் விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. எனவே எஸ்.ஐ.டி அமைத்த உத்தரவை ரத்து செய்கிறோம் என்று உத்தரவிடுவார்கள். இவை சட்ட நடவடிக்கைகள். இனி அதில் அரசியல் இருக்கக்கூடாது. ஆனால் விஜய்கிட்ட தான் பொறுப்பு நிறைய உள்ளது. நீங்கள் யார்? திரைகளை விலக்கிவிட்டு மக்களிடம் இன்னொரு முறை உங்களை முகத்தை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது.

கொள்கை எதிரிகள் என்று சொல்கிறீர்கள் பாஜக வழக்கறிஞர்கள் உங்களுக்காக ஆஜராகிறார்கள். அதிமுக சார்பில் எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார். அதில் நான்கு பேர் தவெக கொடியை ஆட்டுகிறார்கள். அவர்களில் ஒருவர் அதிமுக உடை அணிந்திருக்கிறார் என்று அதுவும் அம்பலப்பட்டு விட்டது. அப்போது நான் வீறுகொண்டு வருவேன் என்று விஜய் சொல்கிறபோது முதல் நாளே இந்த சந்தேகங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய கடமை உள்ளது. நயினார் நாகேந்திரன் கழுத்தை நெரித்துகொன்றதாக சொல்கிறார். அது பொறுப்பற்ற பேச்சு. அது விவாதிக்கக் கூட தகுதி அற்றதாகும். நயினார் நாகேந்திரன் நாக்கில் சனி வந்து அர்ந்து பேசிய பேச்சு. அதை விவாதிக்கக்கூட தகுதியற்றதாகும்.

கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழக அரசியல் களம் மாறியுள்ளது. பாஜக அணியுடன் கூட்டணி அமைய வாய்ப்பில்லை என்று மதுரை மாநாட்டில் பிரகடனப்படுத்திய விஜய், கரூர் சம்பவத்திற்கு பிறகு திரைமறைவில் குருமூர்த்தியை சந்தித்தார். குருமூர்த்தி அதை மறுத்த பிறகும், மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் தவெக வழக்கறிஞர்களுக்கு பாஜக வழக்கறிஞர்கள் உதவினார்கள். உச்சநீதிமன்றத்தில் வெளிப்படையாகவே ஆஜராகினார்கள். அப்போது இது சட்ட நடவடிக்கைகள் மட்டும்தானா? அல்லது உண்மையிலேயே பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறாரா? என விஜய் தெளிவுபடுத்த வேண்டும்.

கொள்கை எதிரி என்று சொல்லிவிட்டு பாஜக கூட்டணிக்கு விஜய் சென்றால் அது அதிகாரப் பசிதான். திமுகவை வீட்டிற்கு அனுப்புவது மட்டும் அல்ல. நாமும் ஒரு பதவிக்கு வர வேண்டும் என்கிற வெறிதான். எனவே சராசரி அரசியல்வாதிதான் விஜய். 2026ல் விஜய் அதிமுக – பாஜக கூட்டணிக்கு வந்தால் அவர்கள் வெற்றியை நோக்கி பயணிப்பார்கள். அது அதிமுகவுக்கு தான் பலமாக இருக்கும். அதே வேளையில் விஜய் என்கிற பிம்பம் உடைபடும். அவருடைய ஆலோசகர்களே அதை மறுக்க மாட்டார்கள்.

2.5 ஆண்டுகள் முதலமைச்சர் அல்லது 5 ஆண்டுகளுக்கு துணை முதலமைச்சர் அல்லது நல்ல வாக்கு சதவீதத்துடன், 10 – 15 எம்.எல்.ஏ-க்கள் என்பதுடன் அவருடைய அரசியல் வளர்ச்சி முடிந்துவிடும். மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. விஜயை விட பெரிய ஜாம்பவான்களை எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துவிட்டார்கள். அவருடைய நிஜ உருவத்தையும் தமிழ்நாடு மக்கள் பார்த்தவர்கள்தான், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ