spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைடுவிஸ்ட் வைத்த உச்சநீதிமன்றம்! தவெக தரப்பு வைத்த வாதம்! விஜய்க்கு வாழ்வா? சாவா? போராட்டம்!

டுவிஸ்ட் வைத்த உச்சநீதிமன்றம்! தவெக தரப்பு வைத்த வாதம்! விஜய்க்கு வாழ்வா? சாவா? போராட்டம்!

-

- Advertisement -

கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜய் ஒட்டுமொத்தமாக தன்னுடைய அரசியல் வாழ்வை முடித்துக்கொள்கிற நிலைக்கு போய்விட்டார் என்றுதான் கூட்டணி பேச்சவார்த்தைகள் காட்டுகின்றன என்று மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

கரூர் துயர சம்பவம் குறித்த உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை குறித்து மூத்த பத்திரிகையாளர் நாதன் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்கணாலில் தெரிவித்து உள்ளதாவது:- உச்சநீதிமன்றத்தில் விசாரணையின்போது கரூர் சம்பவம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் எல்லைக்குள் வருகிறபோது, எப்படி அதை சென்னை உயர்நீதிமன்றம் எடுக்கலாம்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் பொதுக் கூட்டங்களுக்கு விதிகளை வகுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் எப்படி சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்து உத்தரவிட்டது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. தவெக தரப்பை பொறுத்தவரை இந்த எஸ்.ஐ.டி- ஐ ஏற்க முடியாது என்று சொல்கிறார்கள். புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோருக்கு முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்தபோது அதை விபத்து என்று சொன்னார்கள். ஆனால், தவெக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அது விபத்து அல்ல என்றும், கூட்டத்தில் ஆளும்கட்சி ஆதரவு ரவுடிகள் உள்ளே புகுந்துவிட்டார்கள் என்று சொல்கிறார்கள். சதி கோட்பாட்டை உறுதிபடுத்தும் வகையில் தான் தங்களுடைய மனுவையே உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் மாற்றி மாற்றி பேசுவது உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டால், அவர்களே தவெகவை புரிந்துகொள்வது உறுதி.

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கூடாது - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்..!

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சிபிஐ விசாரணை எதற்காக கேட்கிறார்கள் என்றால், அவர்களும் சதிக் கோட்பாட்டை ஆளுக்கு ஒரு ஒரு கருத்தை எடுத்து பேசுவது போல இருக்கிறது. அதில் பன்னீர்செல்வம் என்பவர் குழந்தை பிறந்தபோதே விட்டுவிட்டு சென்ற நிலையில், தற்போது குழந்தை மரணம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக வீடியோக்கள் வெளியாகி உள்ளன. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஆடுகிற நிலைமையில் இல்லை. ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக தரப்பில் அவர்களை வைத்துக்கொண்டு அரசியல் ஆதாயம் தேடலாம் என்றுதான் வழக்கு தொடர்ந்துள்ளார்கள். தமிழக அரசு தரப்பில், சென்னை உயர்நீதிமன்றம் தான் எஸ்.ஐ.டி அமைத்ததாக தெரிவிக்கப் பட்டது. அதற்கும் தமிழக அரசுக்கும் தொடர்பில்லை. விசாரணை அதிகாரியான அஸ்ரா கார்கை நீதிமன்றம்தான் நியமித்தது என்றும், அவர் சிபிஐயில் பணிபுரிந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் சிபிஐ விசாரணையை முக்கியமான தருணங்களில்தான் பயன்படுத்த முடியும். சிறிய விஷயங்களுக்கு அதை பயன்படுத்துவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டது.

tamilnadu assembly

தவெக தரப்பின் முக்கியமான கோரிக்கை என்பது, விஜய் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சொன்ன கருத்துக்களை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான். விஜயை கரூரில் இருந்து சென்னைக்கு போக சொன்னது காவல்துறைதான் என்று, நாங்களாக அங்கிருந்து போகவில்லை என்று சொல்கிறார். இதிலே உண்மை என்ன என்றால் சம்பவ இடத்தில் இருந்துதான் காவல்துறை போக சொல்லி இருக்க முடியுமே தவிர, கரூரில் இருந்து போக சொல்ல முடியாது. அதேநேரத்தில் உச்சநீதிமன்றம், விஜய் கரூரில் இருந்து போனாரா? இல்லையா? என்பது இந்த வழக்கிற்கு தேவையில்லாதது என்று தெரிவித்து விட்டனர். இரவு நேரத்தில் பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சொல்லப் பட்டது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறுக்கிட்டு, அசாதாரணமான சூழலில் மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்தால் பிரதே பரிசோதனை செய்யலாம் என்று கூறினார்.  அதேவேளையில் தெளிவுக்காக 3- 4 மணி நேரத்தில் எப்படி பிரேத பரிசோதனை செய்தார்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு தமிழக அரசு மருத்துவர்கள் மாநாடு சேலத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற 200 மருத்துவர்களை வரவழைத்து பிரேத பரிசோதனை மேற்கொண்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. தவெகவில் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வைத்த வாதங்களின் சாராம்சம் இவைதான். உச்சநீதிமன்றம் இதை வைத்துக்கொண்டு என்ன உத்தரவு வழங்கப் போகிறது என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், திமுக சதி செய்துவிட்டது, சமூக விரோதிகள் புகுந்துவிட்டார்கள் என்பதற்கோ,  போலீசார் தடியடி நடத்தினார்கள் என்பதற்கோ ஆதாரம் கிடையாது என்று தெரிவித்தார். கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.20 லட்சம் கொடுக்கிறார்கள். இப்படி பணம் கொடுப்பதாலேயே அவர்களை எல்லாம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு விஜய் தரப்பில் மேனுபுலேட் செய்கிறார்கள். அஜித் மரணத்தின்போது சிபிஐ விசாரணைணை எதிர்த்த விஜய், தற்போது சிபிஐ விசாரணை வேண்டும் என்று சொல்கிறார். அப்போது , விஜய் தரப்பில் பெரிய தவறு ஏதோ செய்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு, ஜனநாயகன் ஷுட்டிங்கிற்கு, 60 டிரோன்களை பறக்கவிட்டுள்ளனர் என்று சொல்கிறார்கள். தற்போது சிபிஐ விசாரணை வலிந்து திரும்ப திரும்ப கேட்க வேண்டிய அவசியம் என்ன உள்ளது? சிபிஐ, பாஜக கட்டுபாட்டில் இருக்கும் அமைப்பாகும். அதிமுகவை எப்படி சின்னத்தை வைத்து மிரட்டுகிறார்களோ. அதேபோல் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றிவிட்டால், தேவைப்படும் நேரத்தில் தவெகவை கரூர் சம்பவத்தை வைத்து மிரட்டுவார்கள்.

இனி அரசோ, காவல்துறையோ பழைய படி விஜய் சாலையில் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்க மாட்டார்கள். தற்போது அவர் தோண்டிய பள்ளத்தில் அவரே விழுந்துவிட்டார். முதல் விஷயம் தன்னுடைய பிம்பத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு ஒரே வழி பாஜகவிடம் சரணடைவதுதான். அதனால் விஜய் இந்த பாதைக்கு வந்து சேர்ந்திருக்கிறார். விஜயின் அரசியல் என்பது 10 நிமிடங்களுக்குள் மேலோட்டமான விஷயங்கள் பேசுவது, அதில் ஒரு பன்ச் டயலாக் பேசுவதுதான். இதுவரை அவர் செய்த பிரச்சாரத்தை ஒன்றரை மணி நேரத்தில் அடக்கிவிடலாம். அதுவும் அவர் அரசியல் எதிரி என்று சொல்கிற திமுகவை தான் அதிகமாக தாக்கி பேசுகிறார். இந்த பிம்பத்தை ரசிகர்கள் மத்தியிலும் உருவாக்கி வைத்திருக்கிறார். அவர்கள் இயல்பாகவே திமுக எதிர்ப்பு மனநிலையில் இருக்கிறார்கள். கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் என்டிஏ கூட்டணி சொன்றாலும், அவருடைய ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் பொதுமக்கள் மறும் நடுநிலையானவர்கள் விஜயின் இந்த நடவடிக்கையை ஒரு தற்கொலை பாதையாகதான் பார்ப்பார்கள். விஜய் ஒட்டுமொத்தமாக தன்னுடைய அரசியல் வாழ்வை முடித்துக்கொள்கிற நிலைக்கு போய்விட்டார் என்பதுதான் கூட்டணி பேச்சவார்த்தைகள் காட்டுகின்றன.

எடப்பாடி தன்னுடைய கூட்டத்தில் தவெக கொடி பறப்பதை எவ்வளவு மகிழ்ச்சியாக அறிவிக்கிறார். இதுவே பிள்ளையார் சுழி என்று சொல்கிறார். இவற்றை எல்லாம் பார்க்கும்போது அவர்களுக்குள் டீல் உறுதியாக உருவாகிவிட்டது என்றுதான் தோன்றுகிறது. விஜயை பொருத்தவரை  கரூர் சம்பவம் தோற்றுவித்த பயம். அதனால் பாஜகவிடம் சரண்டர் ஆகிவிட்டார். சிபிஐ விசாரணை கேட்கிறார். இவற்றை எல்லாம் வைத்துக்கொண்டு நாம் அடுத்த தேர்தலில் 50 சீட்டுகளே அதிகம் என்று செட்டில் ஆகிவிட்டார். எனவே ஜனநாயகன் என்பது விஜயின் கடைசி படம் அல்ல. தேர்தல் முடிந்ததும் அடுத்து அடுத்து படங்களில் நடிப்பார். ஆனால் 2026 தேர்தல் விஜயின் கடைசித் தேர்தலாக இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ