திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 150 பேருடன் சுற்றுலா வந்த 67 வயது பாட்டி காணவில்லை. தாய் காணாமல் போனதை அறிந்த மகன் உத்தரகாண்டில் துணை ராணுவத்தில் பணிபுரிந்த நிலையில் விடுமுறை பெற்று தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் பெரியார் தாலுக்கா சல்லுப்பாபட்டி கிராமத்தை சேர்ந்த வெள்ளை தாய் 64 ,சுற்றுப்பகுதி கிராமதமத்தினருடன் சேர்ந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக ஸ்தலங்களில் சுவாமி தரிசனம் செய்ய இரண்டு நாட்களுக்கு முன்னற் புறப்பட்டு வந்துள்ளனர். மேல்மருவத்தூரில் சாமி தரிசனம் செய்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்வதற்காக எட்டாம் தேதி திருப்பதி வந்துள்ளனர். பின்னர் 10 ந் தேதி சாமி தரிசனம் செய்த பின்னர் லட்டு கவுண்டரில் லட்டு வாங்க சென்று தனுடன் வந்த கிராமத்தினரை தொலைத்து வெள்ளைதாய் காணாமல் போனார்.

இதனால் உடன் வந்த கிராமத்தினர் பல இடங்களில் தேடியும் வெள்ளை தாயை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் மைக் மூலம் எங்கு இருந்தாலும் வரும்படி அறிவிப்பு செய்தனர். இருப்பினும் கிடைக்காத நிலையில் போலீசாரிடம் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் நீங்களே தேடுங்கள் என அனுப்பி வைத்து விட்டனர். இதனை அடுத்து ஊரில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்து உடன் வந்த கிராமத்தினர் அனைவரும் திரும்ப சென்றனர். வெள்ளத்தாயின் உறவினர்கள் திருப்பதி திருமலைக்கு வந்து பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர் ஆனால் போலீசார் மீண்டும் புகார் வாங்க மறுத்து விட்டனர்.
இதனை அடுத்து அவரது மகன் மாரியப்பன் உத்தரகாண்ட் எல்லையில் துணை ராணுவத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து உடனடியாக விடுமுறை பெற்ற மாரியப்பன் திருப்பதிக்கு நேரடியாக வந்து தனது தாயை பல இடங்களில் தேடிவந்துள்ளார். ஆனால் எங்கும் கிடைக்காததால் மீண்டும் காவல் நிலையத்திற்கு சென்று தனது அடையாள அட்டையை காண்பித்தார். இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் சிசிடிவி கேமரா காட்சிகளில் ஆய்வு செய்த போது லட்டு கவுண்டரில் மற்றும் திருமலையில் சேரும் குப்பைகளை கொட்டும் காக்குல கொண்ட வழியாக வெள்ளைதாய் செல்வது கண்டறியப்பட்டது. அதன் பிறகு அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை இதனை அடுத்து போலீசார் காணாமல் போன வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
இது குறித்து மாரியப்பன் பேசுகையில் எனது தாய் கிராமத்தினருடன் சுமார் 150 பேர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு மாலை அணிந்து வந்தனர். பின்னர் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்து காணாமல் போனார். கடந்த பத்தாம் தேதி காணாமல் போன நிலையில் இதுவரை அவர்களிடம் பணமும் இல்லாமல் அவர் உடுத்திய அதே ஆதிபராசக்தி மாலை அணிந்து அதே புடவையில் உள்ளார் .சாப்பிட கூட வழியில்லாத நிலையில் அவர் எங்கு சென்றார் என்ன ஆனார் என்று தெரியாது நிலை உள்ளது. எனவே போலீசாரம் ஆந்திர மாநில அரசும், தமிழக அரசும் இணைந்து எனது தாயாரை காப்பாற்றி கண்டுபிடித்து தர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
கொடிவேரி அணையில் 300 சவரன் நகையுடன் குளித்த அதிமுக பிரமுகரை அதிரடியாக வெளியேற்றிய போலீசார்


