spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்திமுக எம்.பி-கள் குறித்து அநாகரீகப்பேச்சு- வார்த்தைகளைத் திரும்பப்பெற்ற மத்திய அமைச்சர்..!

திமுக எம்.பி-கள் குறித்து அநாகரீகப்பேச்சு- வார்த்தைகளைத் திரும்பப்பெற்ற மத்திய அமைச்சர்..!

-

- Advertisement -

திமுக அரசு குறித்த பேச்சை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் திரும்பப்பெற்றார். நாகரீகமற்றவர்கள் என திமுகவினரை பேசியதை திரும்பப்பெற்றுக் கொள்வதாக மக்களவையில் தர்மேந்திர பிரதான் திரும்பப்பெற்றார்.  dharmendra pradhan

”மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு நிச்சயம் ஏற்காது. தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஆதரித்ததாக தர்மேந்திர பிரதான் திசை திருப்பும் விதமாக பேசி வருகிறார்” என நாடாளுமன்றத்தில் திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

நாடாளுமன்ற இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, ​​மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் மத்திய அமைச்சர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கேள்வி நேரத்தின் போது, ​​ பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட நிதி குறித்து திமுக எம்.பி.,க்கள் கேள்வி எழுப்பினார். மத்திய அரசு பாகுபாடு காட்டுவதாகவும் அவர் குற்றம் சாட்டினர். கேள்விக்கு பதிலளிக்கும் போது, ​​கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூர்மையாக பேசினார்.

சட்டமன்றம் வரமாட்டோம் என வீட்டிலிருந்தே விடுமுறை கடிதம் கொடுத்தாலே எங்கள் முதல்வா் ஒப்புக்கொல்வார் - கனிமொழி எம்.பி

பாகுபாடு காட்டப்படுவதாக எழுப்பிய குற்றச்சாட்டால் வேதனையடைந்த கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ”நாங்கள் அனைவருக்காகவும் பாடுபடுகிறோம்.இந்த முறையில் பாகுபாடு காட்டியதாக அரசை குற்றம் சாட்ட முடியாது. அவர் ஜனநாயகத்துக்கு விரோதமாக, நாகரிகமற்ற முறையில் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள் தமிழக முதல்வர் மாணவர்கள் விஷயத்தில் அரசியல் செய்கிறார் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன்” என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியபோது, எதிர்க்கட்சிகள் அவையில் கோஷங்களை எழுப்பி எதிர்ப்புத் தெரிவித்தனர்.

சென்னை தெற்கு திமுக எம்.பி., தமிழச்சி தங்கப்பாண்டியன், ”மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு கல்வி தொடர்பான நிதியை வழங்காதது குறித்து பி.எம்.ஸ்ரீ நிதியின் கீழ் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி வழங்கப்பட இருந்தது. தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ நாங்கள் எதிர்த்ததால், அது மற்ற மாநிலங்களுக்கு மாற்றப்பட்டு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினைப் பற்றி குறிப்பிட்டு, கூட்டுறவு கூட்டாட்சிக்கு ஏற்பட்ட அடி இது. மாநில அரசுக்கு எதிராக பழிவாங்குவதற்கான ஒரு கருவியாக கல்விக்கான நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்துவது குறித்து அவர் கல்வி அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். இந்த நடவடிக்கை அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளைப் பாதிக்கிறது என்று அவர் கூறினார்.

அரசியல் சட்டத்தை வணங்கினார் மோடி... தமிழகத்தின் வெற்றியே காரணம் - தமிழச்சி தங்கப் பாண்டியன் கருத்து

இதற்கு பதிலளித்த தர்மேந்திர பிரதான், ”திமுக-வினர் நேர்மையற்றவர்கள். அவர்கள் தமிழ்நாட்டு மாணவர்கள் மீது உறுதியாக இல்லை. அவர்கள் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்குகிறார்கள். மொழித் தடைகளை உருவாக்குவது மட்டுமே அவர்களின் வேலை. அவர்கள் அரசியல் விளையாடுகிறார்கள்.அவர்கள் ஜனநாயக விரோதமானவர்கள், நாகரிகமற்றவர்கள்.

நிதியாண்டு முடிவடைய இன்னும் 20 நாட்கள் உள்ளன. தமிழகத்துடன் நாங்கள் நடத்தி வரும் விவாதங்களின்படி, இந்த விஷயத்தை திறந்த மனதுடன் பரிசீலிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. இந்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழக அரசு தயாராக இருந்த ஒரு காலம் இருந்தது. எம்.பிக்கள் வந்து எங்களைச் சந்தித்தனர். தமிழக கல்வி அமைச்சருடன் எங்களிடம் வந்தனர். இப்போது இந்த விஷயத்தில் ஒரு தென்னிந்தியாவில் கர்நாடகாவை உதாரணமாகக் காட்ட விரும்புகிறேன். அவர்கள் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறார்கள்.dharmendra pradhan

பிரதம மந்திரி ஸ்ரீ யோஜனா இமாச்சலத்திலும் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகக் குழந்தைகள் மீது உறுதியாக இல்லை. அவர்கள் மாணவர்களின் எதிர்காலத்தை கெடுத்து, நாசமாக்குகிறார்கள். மாநிலத் தலைவர்கள் வேண்டுமென்றே அரசியல் செய்கிறார்கள். இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு எதிராக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியாது” என்று அவர் கூறினார்.

MUST READ