பிரபல நடிகை ஒருவர் விஜய் கட்சியில் சேர போகிறேன் என்றும், அவருக்காக பிரச்சாரம் செய்வேன் என்றும் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். அந்த வகையில் கிட்டத்தட்ட 68 படங்களில் நடித்து தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை சேகரித்து வைத்திருக்கிறார். தற்போது இவர் தனது 69 வது படமான ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஹெச். வினோத் இயக்கி வரும் இந்த படம் 2026 ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி இருக்கிறது. இதற்கிடையில் நடிகர் விஜய், அரசியல்வாதியாக மாறி உள்ள நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார். இவருடைய அரசியல் வருகைக்கு பலரும் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை வாணி போஜன் தனது கருத்தினை தெரிவித்து இருக்கிறார். அதாவது ஏற்கனவே இவர், விஜய்க்கு ஏன் ஒரு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இவர், விஜயின் கட்சியில் சேரப்போவதாகவும், அவருக்காக ஊட்டியில் பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை வாணி போஜன், சின்னத்திரையில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியலின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர். இவர் சினிமாவிலும் என்ட்ரி கொடுத்து தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான கேங்கர்ஸ் படத்தில் சுந்தர்.சிக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.