2026 தேர்தல் குறித்து திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக 50 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் விருப்பம் தெரிவித்துள்ளாா். இந்த ஆலோசனை கூட்டத்தை அன்புமணி புறக்கணித்த நிலையில் அவருக்கு ஆதரவாக பல மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பா.ம.க.வின் 108 மாவட்டங்களில் தலைவர், செயலாளர் என 216 பேருக்கு அழைப்பு விடுத்தநிலையில் 8 மாவட்ட செயலாளர்கள் மற்றும் 7 மாவட்ட தலைவர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்கள் ராமதாஸ் அழைப்பை நிராகரித்துள்ளனர்.
தைலாபுரத்தில் நடைபெற்ற கட்சியில் மாவட்ட செயளாலர் கூட்டத்திற்கு பின் செய்தியாளர் சந்திப்பில் பாமக நிறுவனர் கூறியிருப்பதாவது, ” தனியாக நின்றாலும் பாமக 40 தொகுதிகளில் வெற்றி பெற முடியும், ஆனால் நிச்சயம் கூட்டணி உண்டு எனக் குறிப்பிட்டுள்ளாா். மேலும் ஆலோசனை கூட்டத்தில் பேசிய ராமதாஸ் கட்சியின் வளர்ச்சிக்காக இக்கூட்டம் நடைபெறுகிறது. செயல்தலைவர் அன்புமணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள் களைப்போடு இருப்பதால் சிலர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை எனவும் கூறியுள்ளாா். பின்னர் ஆலோசனை கூட்டத்தில் ”சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறையாது”என கூறிய அவர், படுத்துக்கொண்டே 50 தொகுதிகளில் வெற்றி பெறுவது எப்படி என்ற வித்தையை கற்றுக் கொடுத்திருக்கிறேன். கூட்டத்தில் பங்கேற்காதவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கபடமாட்டாது. களைப்போடு இருக்கும் நிர்வாகிகளிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறோம் என்று கூறியுள்ளாா்.
வட மாவட்டங்களுக்கு கல்வியில் விடியல் கிடைப்பது எப்போது? – அன்புமணி கேள்வி
