spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநகை கடன் கட்டுபாடுகளை மறுபரிசீலனை செய்ய முதலமைச்சர் வலியுறுத்தல்!

நகை கடன் கட்டுபாடுகளை மறுபரிசீலனை செய்ய முதலமைச்சர் வலியுறுத்தல்!

-

- Advertisement -

தங்க நகை கடன் கட்டுபாடுகளை மறுபரிசீலனை செய்ய ஒன்றிய நிதியமைச்சருக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்.நகை கடன் கட்டுபாடுகளை மறுபரிசீலனை செய்ய முதலமைச்சர் வலியுறுத்தல்!ரிசர்வ் வங்கியின் புதிய நெறிமுறைகளால் சிறு, குறு விவசாயிகள், குத்தகைதாரா்கள், பாதிப்படையக் கூடும், இதனால், முறையான கடன் வழங்கும் நிதி நிறுவனங்களை நாடுவது குறைந்துவிடும். விவசாய சமூகத்திற்கும் கிராமப்புற பொருளாதாரத்திற்கும் அதியாவசியமான இதில் கவனம் செலுத்த வேண்டும். இந்திய ரிசர்வ் வங்கியின் வரைவு வழிகாட்டி நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும், இந்த கட்டுபாடுகளால் கிராமப்புற கடன் விநியோக முறைக்கு கடும் இடையூறுகள் ஏற்படும். எனவே இந்த கட்டுபாடுகளை திரும்பப்பெறக் கோரி இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநருக்கும், ஒன்றிய நிதியமைச்சர் நில்மலா சீதாராமனுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளாா். நகைக் கடன் கட்டுப்பாடுகளை கண்டித்து தஞ்சையில் மே-30-ம் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கியின் புதிய கட்டுப்பாடுகள் – மக்கள் கடும் எதிர்ப்பு!

MUST READ