spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்மதுரை ஆதினம் நீதிமன்றத்திற்கு செல்ல தேவையில்லை-வழக்கறிஞர் சேதுபதி

மதுரை ஆதினம் நீதிமன்றத்திற்கு செல்ல தேவையில்லை-வழக்கறிஞர் சேதுபதி

-

- Advertisement -

மதுரை ஆதினம் மீதுள்ள வழக்கில் அவரது சார்பில் செயலாளர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக காவல் நிலையத்தில் மதுரை ஆதினத்தின் செயலாளர் செல்வகுமார் மற்றும் வழக்கறிஞர் சேதுபதி  பேட்டியளித்துள்ளாா். ஆதினம் காவல் நிலையம் மற்றும் நீதிமன்றத்திற்கு செல்ல தேவையில்லை என்ற ஆணை இருப்பதாக மதுரை ஆதினத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.மதுரை ஆதினம் நீதிமன்றத்திற்கு செல்ல தேவையில்லை- வழக்கறிஞர் சேதுபதிஉளுந்தூர்பேட்டை அருகே ஏற்பட்ட விபத்து குறித்து பொய்யான தகவலை பரப்பியது தொடர்பாக மதுரை ஆதீனத்தின் மீது சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே மதுரை ஆதினத்திற்கு ஒருமுறை சம்மன் அனுப்பிய போது விசாரணைக்கு ஆஜராகாததால் மீண்டும் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் வீடியோ கான்பரன்சிங் மூலமாக தான் விசாரணைக்கு ஆஜராகி முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், நேரில் தனது செயலாளர் வழக்கறிஞருடன் ஆஜராகுவார் எனவும் மதுரை ஆதீனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் அமைந்துள்ள சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் மதுரை ஆதீனத்தின் சார்பில், அவரது செயலாளர் செல்வகுமார் வழக்கறிஞருடன் நேரில் ஆஜராகி  விளக்கம் அளித்தார். பின்னர் விளக்கம் அளித்து விட்டு வெளியே வந்த மதுரை ஆதீனத்தின் செயலாளர் செல்வகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.மதுரை ஆதினம் நீதிமன்றத்திற்கு செல்ல தேவையில்லை- வழக்கறிஞர் சேதுபதிஅப்போது பேசிய அவர், இன்று வழக்கு விசாரணைக்கு ஆஜராகி முழுவிளக்கத்தை அளித்ததாகவும், சம்பவம் நடந்த அன்று மதுரை ஆதீனம் என்ன பார்த்தாரோ அதைத்தான் சொன்னதாக கூறியுள்ளாா். இது குறித்து வதந்தி பரப்புவதாக அவர் தெரிவித்துள்ளாா். மேலும் மதுரை ஆதீனம் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவரது தரப்பில் இருந்து யாரேனும் ஆஜரானால் போதுமானது எனவும் அவர் தெரிவித்தார்.

we-r-hiring

7 நாட்கள் அவகாசம் கேட்டிருப்பதாகவும், ஆதீனம் நீதிமன்றத்திற்கு அல்லது காவல் நிலையத்திற்கோ செல்லக்கூடாது என ஆணை இருப்பதாகவும் அதை நேரில் ஆஜராகி தெளிவுபடுத்திவிட்டு வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். முழு விசாரணைக்கு அவர் சார்பில் நாங்கள் நேரில் ஆஜராக தயாராக இருப்பதாகவும் காவல்துறை அவகாசத்தை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், காவல் நிலையத்தின் அழைப்பானையை மதிக்கும் பொருட்டு, ஆதினத்தின் சார்பாக ஆதினம் நியமித்த பிரதிநிதி ஒருவர் நேரில் அழைப்பானைக்கான அதன் விளக்கத்தை தருவார் என்பதை தெரிவித்து கொள்கிறோம். மேற்படி விசாரணையின் பொருட்டு விளக்கங்கள் தேவைப்பட்டால், ஆதினமே காணொளி வாயிலாக விளக்கம் தர தயாராக உள்ளார் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம். கடந்த 03.07.2025-ம் தேதியன்று முறையான விளக்கத்துடன் கூடிய கடிதம், காவல்துறையின் உரிய உயரதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் காவல்துறையின் விசாரணைக்கு மேற்கூறியவாறு நாங்கள் ஒத்துழைக்க தயாராக உள்ளோம் என்பதனை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தாா்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்…அதிகாரிகள் ஆலோசனை

MUST READ