spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநாளை முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!!

நாளை முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!!

-

- Advertisement -

நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்

நவம்பர் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பல முக்கிய மாற்றங்கள் அமலில் வரவுள்ளன. அவைகள் என்ன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.நாளை முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!!சிலிண்டர் விலையில் மாதத்தின் முதல் நாள் மாற்றம்

முதன்மையான மாற்றங்கள், நவம்பர் 1 முதல் சிலிண்டர் விலைப்படி மாற்றங்கள், ஆதார் பதிவு விதிமுறைகள் மற்றும் கட்டண உயர்வுகள், குழந்தைகள் ஆதார் பயோமெட்ரிக் அப்டேட்கள் தொடர்பான விதிகள், வங்கி கணக்குகளில் நாமினிகளை நியமனம் செய்வது போன்ற புதிய வசதி மற்றும் ஓய்வூதியத் தொடர்பான கடைசித் தேதிகள் போன்றவை ஆட்சேபணைக்கு உட்பட்ட முக்கிய மாற்றங்களாகும்.

we-r-hiring

சிலிண்டர் விலையில் மாதத்தின் முதல் நாளில் மாற்றம் இருக்கும்.விலை உயர்வு, குடும்பங்களின் மாதாந்திரச் செலவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், மாதத் தொடக்கத்தில் செய்திகள் மூலம் புதிதாக மாற்றியமைக்கப்படும் விலையைக் கவனிக்கப் பரிந்துரைக்கப்படுகிறது.

ஆதார் பதிவு மற்றும் அப்டேட் கட்டண உயர்வுகள்

இந்தியாவில் ஆதார் அட்டை ஒரு முக்கிய அடையாள ஆவணமாக விளங்குகிறது. இதன்படி, ஆதார் அட்டையில் பெயர், மொபைல் எண், பிறந்த தேதி போன்ற அடிப்படை மாற்றங்களைச் செய்யும்போது, மாற்றத்திற்கான உரிய சப்போர்டிங் ஆவணங்களை (Supporting Documents) தாக்கல் செய்வது அவசியமாகும்.

விண்ணப்பம் செய்த பிறகு, UIDAI அமைப்பு அந்த ஆவணங்களில் உள்ள தகவல்களையும், தேவைப்பட்டால் அரசு தளங்களில் இருந்து கிடைக்கும் தகவல்களையும் சரிபார்த்து உறுதிசெய்யும். ஆவணங்களைச் சமர்ப்பிப்பதில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படவில்லை.

ஆதார் அட்டையில் பொதுவாக பெயர்,பிறந்த தேதி,முகவரி ,மொபைல் எண் போன்ற அடிப்படை மாற்றம் செய்வதற்கான கட்டணம் ரூ.50-லிருந்து ரூ.75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று பெரியவர்களுக்கு பயோமெட்ரிக் தகவல்களான கருவிழி, கைவிரல் ரேகை ,புகைப்படம் உள்ளிட்டவற்றை மாற்றம்  செய்வதற்கான கட்டணமும் ரூ.100-ல்ருந்து ரூ.125 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.”

குழந்தைகள் ஆதார் பயோமெட்ரிக் அப்டேட்கள்: புதிய விதிகள் மற்றும் சலுகை

குழந்தைகள் ஆதார் அப்டேட்கள், ”5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் ஆதார் அட்டையில் பயோமெட்ரிக் தகவல்களை அவர்கள் 7 வயது முடிவதற்குள் அப்டேட் செய்யவது கட்டாயமாகும். இல்லையெனில் அந்த ஆதார் அட்டை செயலிழக்கும்.

அதேபோன்று, ஒரு குழந்தை 15 வயதை அடைந்த பிறகும் (15 முதல் 17 வயதுக்குள்) புகைப்படம், கைரேகை உள்ளிட்ட அனைத்து பயோமெட்ரிக் விவரங்களையும் கட்டாயமாகப் புதுப்பிப்பது அவசியம்.

UIDAI-இன் முக்கியமான அறிவிப்பு:

  • 7 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கட்டாயப் பயோமெட்ரிக் அப்டேட்டிற்கு (Mandatory Biometric Update – MBU) வசூலிக்கப்பட்ட ₹125 கட்டணம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆகையால் பயோமெட்ரிக் அப்டேட்களை இலவசமாகச் செய்து கொள்ளலாம்.
  • இந்தச் சலுகை அக்டோபர் 1, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது மற்றும் ஒரு வருட காலத்திற்குத் (செப்டம்பர் 30, 2026 வரை) தொடரும்.
  • உங்கள் குழந்தையின் பயோமெட்ரிக் தரவுகள் புதுப்பிக்கப்படாமல் இருப்பின், இந்தச் சலுகைக் காலத்தைப் பயன்படுத்தி இலவசமாகப் புதுப்பிக்குமாறு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) பெற்றோர்களை வலியுறுத்தியுள்ளது.

    வங்கி கணக்குகளில் நாமினி நியமனம்: புதிய வசதி

வங்கி கணக்குகளில் நாமினி நியமனம் நவம்பர் 1 முதல் ஒரு வங்கி வைப்புக் கணக்கிற்கு ஒரே நேரத்தில் வரை நான்கு நாமினிகள் வரை நியமனம் செய்ய முடியும். மேலும், அந்த நாமினிகளுக்கு கணக்கில் உள்ள தொகையை எவ்வளவு சதவீதமாகப் பகிர வேண்டும் என்பதைப் பதிவிட்டு வங்கியில் அறிவிக்கலாம். இதனால் குறிப்பிட்ட நவீன நாமினி அமைப்புகள் எளிமையடைந்துள்ளன.

ஓய்வூதியத் தொடர்பான முக்கியக் கடைசித் தேதிகள்

என்.பி.எஸ் – யு.பி.எஸ் மாற்றம்: என்.பி.எஸ் – யு.பி.எஸ்,” மத்திய அரசு ஊழியர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டமான NPS-இல் இருந்து ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டமான UPS (யுபிஎஸ்)க்கு மாற விரும்பின், அது செய்ய வேண்டிய கடைசி தேதி நவம்பர் 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியதாரர்களுக்கான Life Certificate: ஓய்வூதியதாரர்களுக்கான Life Certificate மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளின் ஓய்வூதியர்கள் ஒவ்வொரு ஆண்டும் Life Certificate (உயிர்க்கான சான்றிதழ்) தாக்கல் செய்ய வேண்டும். இந்த நவம்பர் மாத இறுதிக்குள் தங்களுக்கு அருகிலுள்ள வங்கி கிளையில் சென்று அது கட்டாயமாக தாக்கல் செய்யப்பட வேண்டும். தாக்கல் செய்யப்படவில்லை என்றால் ஓய்வூதிய தொகை வழங்குவதில் தாமதம் அல்லது சிக்கல் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓய்வூதியதாரர்கள் தங்களது Life Certificate-ஐ நவம்பர் இறுதிக்குள் தாக்கல் செய்யப்பட்டுளதா என்பதை உறுதிசெய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரிட்டன் இளவரசர்… அரச பட்டங்கள் பறிக்கப்படுவதாக தகவல்…

 

MUST READ