spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைநிகிதா இரும்பு பெண்மணி! அஜித் கொலை வழக்கு! அடுத்து என்ன? உமாபதி பேட்டி!

நிகிதா இரும்பு பெண்மணி! அஜித் கொலை வழக்கு! அடுத்து என்ன? உமாபதி பேட்டி!

-

- Advertisement -

சிவகங்கை இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய நிகிதா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இருந்தபோதும் அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

அஜித்குமார் கொலையில் தொடர்புடைய நிகிதாவின் பின்னணி குறித்தும், அவர் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் காவல்துறையினர் தவறு செய்தாலும், அவர்களை காப்பாற்றி விடுவார்கள். ஆனால் சிவகங்கை இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கில் திமுக அரசு உடனடியாக 5 காவலர்களையும் கைது செய்து சிறையில் அடைந்தது. டிஎஸ்பி-ஐ சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை. ஆனால் அஜித்குமார் மீது புகார் தெரிவித்த நிகிதா மிகவும் மோசமானவர் ஆவார். அவரது தாயார், சகோதரர் எல்லோர் மீதும் மதுரை மாவட்டம் திருமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது.

நிகிதாவின் தந்தை உதவி ஆட்சியராக பணிபுரிந்துள்ளார். அவர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்துள்ளார். இந்த வழக்கில் அவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல், அவரது மனைவியின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். நிகிதாவின் தாயார், பணம் பெற்றது, கட்டப் பஞ்சாயத்து செய்தது எல்லாம். அவர்கள் வீட்டில் உள்ள எல்லோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கைது செய்யவில்லை. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கலைஞரை எனக்கு தெரியும் என்று  சொல்லி பணம் வாங்கியுள்ளனர்.  திமுக ஆட்சி இல்லாததால் வேலை வாங்கித்தர முடியவில்லை என்று சொல்லி உள்ளனர். எனினும் அதிமுக ஆட்சிக்காலத்தில் அவர் கைது செய்யப்படவில்லை. நிகிதாவின் தந்தை துணை ஆட்சியராக பணி புரிந்ததால் அவருடன் பணிபுரிந்த அதிகாரிகளுடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார்.

என்னை பொருத்தவரை இன்றைய சூழலில் ஜெயலலிதா, சசிகலா ஆகியோரை விட சக்திவாய்ந்த பெண் என்றால் அது நிகிதா தான். 15 ஆண்டுகளாக எப்.ஐ.ஆர் உள்ள போதும் அவரை கைது செய்ய முடியவில்லை. தற்போது அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட ஒருவருக்கு எப்படி அரசு வேலை வழங்க முடியும் என கேள்வி எழுகிறது. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தனது தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி அரசு வேலை வாங்கியுள்ளார். அவர் மோசடி செய்து வேலைக்கு சேர்ந்ததால் அப்போதே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்று வரை நிகிதாவை தொட முடியவில்லை. கோவையில் டீக்கடைக்காரர் நிகிதாவை பிடித்து வைத்துக்கொண்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், போலீசார், அவரை விட்டு விடுமாறு கூறியுள்ளனர். அந்த அளவுக்கு செல்வாக்கு மிக்க நபராக நிகிதா உள்ளார்.

மதுரையை சேர்ந்த சாதி சங்க தலைவர் திருமாறன் ஜி என்பவரை நிகிதா திருமணம் செய்துவிட்டு, ரூ.50 ஆயிரம் பணத்துடன் ஓடிவிட்டார். நிகிதா மீது 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் பதிவு செய்யப்பட்ட வழக்கிற்கு நாங்க ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் கேட்கலாம். ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் திமுக அரசுக்குதான் கெட்ட பெயராகும். அவர் 10 பவுன் நகை வைத்திருந்தாரா? இல்லையா? என்று காவல்துறை விசாரிக்க வேண்டாமா? எப்போதோ பணம் வாங்கியதற்காக செந்தில் பாலாஜியை கைதுசெய்து, சிறையில் அடைத்தார்கள். ஆனால் நிகிதா மீது அரசால் கைவைக்க முடியவில்லை. நிகிதாவின் நகைகள் திருட்டு போனது உண்மையா? எதற்காக தனிப்படை அனுப்புகிற அளவுக்கு போயிருக்கிறது என்கிற உண்மை தெரிய வேண்டும் என்பது சாமானியனின் குரலாக உள்ளது. நடிகர் ராஜ்கிரண் கூட இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் இது அரசுக்குதான் தெரியவில்லை. தமிழ்நாடே இன்றைக்கு எதிர்பார்ப்பது யார் இந்த நிகிதா? அவரது குடும்பத்தினர் அனைவர் மீதும் எப்.ஐ.ஆர் உள்ளபோதும், கைது செய்ய முடியவில்லை. அரசுப்பணியில் இன்று வரை உள்ளார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான். அதற்கு மேலாக ஒரு இளைஞரை அடித்துக் கொல்வதற்கு தாய் – மகள் இருவரும் காரணமாக இருந்துள்ளனர்.

மக்களின் பல்ஸ் என்பது வேறு. அரசாங்கத்தின் பல்ஸ் என்பது வேறு. இவை இரண்டும் ஒன்றாக இருக்கிறபோதுதான் வெற்றி  பெற்ற அரசாக இருக்க முடியும். மக்கள் ஒரு போக்கிலும், அரசாங்கம் ஒரு போக்கிலும் இருந்தால், மக்கள் இந்த அரசாங்கத்தை தூக்கி எறிந்துவிட்டார்கள் என்று வந்துவிடும். தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கலாம். ஆனால் நிகிதா மீது நடவடிக்கை எடுக்காமல், சட்டப்படி போகிறோம். பழைய எப்.ஐ.ஆர் என்று சொன்னால், எல்லா பாவங்களும் திமுக அரசு மீதுதான் வந்து விழும். ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும், எடப்பாடி பழனிசாமி  ஆட்சிக்காலத்திலும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது திமுக ஆட்சிக் காலத்திலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பழி, பாவங்கள் எல்லாம் திமுக அரசு மீதுதான் விழும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ